பெரும்பாலான கம்ப்யூட்டர் பயனர்கள் தங்களது கம்ப்யூட்டரில் தொடக்கத்தில் விண்டோஸ் இன்ஸ்டால் செய்யப்பட்டபோது இருந்த மென்பொருட்களை அப்படியே பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். இணைய இணைப்புடன் கூடிய கம்ப்யூட்டர்களில் கூட  அப்டேட் செய்யப்படாத பழைய வர்சன் மென்பொருட்களே இருக்கும். குறிப்பாக பிரௌசர்கள் பழைய வர்சன்களாகவே இருக்கும். தொடர்ச்சியாக அதையே பயன்படுத்திக் கொண்டிருப்பதால் லேட்டஸ்ட் வர்சன் மென்பொருட்கள் பற்றி அறிந்துகொள்ளாமலேயே இருப்பர். அதுபோன்றவர்களுக்கு இந்த பதிவு பயன்படும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க கிளிக் செய்யவும். https://www.facebook.com/plugins/like.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FThangamPalaniBlog%2F&width=67&layout=button_count&action=like&size=small&show_faces=false&share=false&height=21&appId

free software latest version

லேட்டஸ்ட் வர்சன் மென்பொருட்களை டவுன்லோடு செய்து பயன்படுத்துவதால் அதில் உள்ள கூடுதல் வசதிகளைப் பெற முடியும். பயனர்கள் அடிக்கடி பயன்படும் மென்பொருட்களின் லேட்டஸ் வெர்சன்களை கூகிளில் தேடி பெற்றுக்கொள்ளலாம். ஒரு சில முக்கியமான மென்பொருட்களின் லேட்டஸ்ட் வர்சன் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பிரவுசர் : கூகுள் குரோம் : Google Chrome 57.0.2987.98

முதன்மையான பிரௌசர் கூகிள் குரோம். இதனுடைய லேட்டஸ் வர்சன் 57.0.2987.98. அதிக வேகம், பயன்படுத்த எளிது போன்றவற்றால் வெளிவந்த சில நாட்களிலேயே முதன்மையான பிரௌசராக இருந்த ஃபையர்பாக்ஸ் உலவியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தது. இதன் லேட்டஸ் வர்சன் 57.0.2987.98

டவுன்லோட் செய்ய: Download Google Chrome latest version 57.0.2987.98

பிரௌசர் : பயர்பாக்ஸ் : Firefox 53.0 Beta 2

கூகிள் குரோம் பிரௌசர் வெளி வருவதற்கு முன்பு அதிகமானவர்கள் பயன்படுத்திய பிரௌவுசர் ஃபயர்பாக்ஸ். தற்பொழுது இரண்டாம் இடத்தில் இருந்தாலும், கூகிள் குரோமிற்கு நிகரான வேகத்துடன் செயல்படக்கூடியது இது. இதனுடைய லேட்டஸ்ட் வர்சன் 53.0 Beta 2

Download செய்ய சுட்டி: Download Latest Version Firefox 53.0 Beta 2

சிஸ்டம் கிளீனர்: சிகிளீனர்: CCleaner 5.28.6005 Download

கம்ப்யூட்டரில் உள்ள தேவையில்லாத டெம்ப் பைல்களை நீக்கி, கம்ப்யூட்டர் வேகமாக செயல்பட உதவும் அற்புதமான மென்பொருள் சிகிளீனர் . இதன் லேட்டஸ்ட் வெர்சன் CCleaner 5.28.6005.

Download செய்ய சுட்டி: Download Latest version CCleaner 5.28.6005

வாட்சப் டெஸ்க்டாப் வெர்சன் 

ஆன்ட்ராய்ட் போனில் மட்டுமல்ல.. இப்பொழுது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் வாட்சப் பயன்படுத்திடலாம். அதற்கான வாட்சப் டெஸ்க்டாப் வெர்சனை வெளியிட்டுள்ளது. இது விண்டோஸ் / மேக் என இரண்டு இயங்குதளங்களிலும் செயல்படும்.

டவுன்லோட் செய்ய சுட்டி: Latest Destop Version Whatsapp 0.2.3699

டேட்டா ரெகவரி : ஒன்டர் ஷேர் : Wondershare Data Recovery: கம்ப்யூட்டர் மற்றும் இதர டேட்டா சேமிப்பகங்களில் அழிந்து போன டேட்டா | கோப்புகளை மீட்டுத் தர பயன்படும் மென்பொருள் Wondershare Data Recovery. இதனுடைய லேட்டஸ் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டவுன்லோட் செய்ய சுட்டி: Download Free Wondershare Data Recovery

மீடியா பிளேயர் : VLC Media Player : பலவித பார்மட்களில் உள்ள  வீடியோ, ஆடியோ வை பார்க்க/கேட்கப் பயன்படும் மிக அதிக வசதிகள் கொண்ட மீடியா பிளேயர் இது. இதன் லேட்டஸ்ட் வர்சன் 2.2.4. இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

டவுன்லோட் லிங்க்: Download Free Latest Version VLC Meida Player 2.2.4

பைல் கம்ப்ரசன் – எக்ஸ்ராக்சன் : Win Zip : கம்ப்யூட்டரில் உள்ள அதிகளவு கொண்ட கோப்புகளை கம்பரஸ் செய்து, அதன் அளவினை குறைக்கப் பயன்படும் மென்பொருள் இது. ஏற்கனவே கம்ப்ரஸ் செய்யப்பட்ட பைல்களை விரிவாக்கவும் இது உதவும். இதனுடைய லேட்டஸ்ட் வெர்சன் winzip 21.

டவுன்லோட் செய்ய சுட்டி: Download Latest Version Winzip21

உங்கள் கம்ப்யூட்டரில் புதிய லேட்டஸ்ட் வர்சன் மென்பொருட்களை பயன்படுத்தத் துவங்குங்கள். அது முந்தைய பதிப்பைவிட விரைவாகவும், அதிக செயல்திறன் மிக்கதாகவும் இருக்கும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *