கம்ப்யூட்டரில் தேவையில்லை என அழித்த பைல்களை ரீசைக்கில் பின்னிலிருந்து அழித்திருப்போம். ஒருவேளை அதில் முக்கியமாக பைல்களும் சேர்ந்து அழிந்திருந்தால், மீண்டும் அதை ரெகவர் செய்ய உதவுகிறது iSkysof Data Recovery மென்பொருள்.

அதேபோல கம்ப்யூட்டரில் வைரஸால் பாழாக்கப்பட்ட பைல்கள், Alt + Delete கொடுக்கப்பட்ட முக்கியமான ஃபைல்கள், டிஜிட்டல் கேமராவில்  பார்மேட் செய்வதற்கு முன்பு இருந்த படங்கள், விண்டோஸ் கம்ப்யூட்டரில் ரீ-இன்ஸ்டால் செய்த பிறகு, முன்பு இருந்த ஃபைல்கள் என அனைத்தும் மீட்க உதவுகிறது இந்த மென்பொருள்.

free data recover software in tamil

ரெகவர் செய்யும் கோப்புகள் – சாதனங்கள்.

நீங்கள் பயன்படுத்தும் ஆடியோ பிளேயர், விண்டோஸ் கம்ப்யூட்டர், ஹார்ட் ட்ரைவ், டிஜிட்டல் கேமிரா, மெமரி கார்டு என அனைத்துவிதமான சாதனங்களிலிருந்தும், வீடியோ, ஆடியோ, டாகுமெண்ட்கள், இமெயில், ஆர்க்கிவ், ஆடியோ என அனைத்து வகையான ஃபைல்களையும் மீட்டுத்தருகிறது.

பயன்படுத்தும் முறை – அமைப்பு:

இந்த மென்பொருளின் அமைப்பு மிக எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் User Interface – பயனர் இடைமுகம் கொண்டுள்ளது.

வெகு விரைவாகவும், எந்த ஒரு தொந்தரவும் இன்றி பைல்களை ரெகவர் செய்து தருகிறது. 1. ரெகவரி மோட் தேர்வு செய்தல் 2. ஸ்கேன் செய்தல் 3. ஃபைல்களை மீட்டல் என மூன்றே ஸ்டெப்களில் பைல்களை ரெகவர் செய்திட வழி வகுகிறது.

தேவைபடும்பொழுது ஸ்கேன் செய்வதை தற்காலிகமாக Pause நிறுத்தவும், நிரந்தரமாக (Stop) செய்யவும் நிறுத்திடவும் முடியும்.

ஸ்கேன் செய்த பிறகு, காட்டப்படும் பைல்களின் பிரிவியூ பார்க்கும் வசதி இருப்பதால் தேவைப்படும் ஃபைல்களை மட்டும் தேர்வு செய்து Recover செய்துகொள்ள முடியும்.

இன்ஸ்டாலேசன் மற்றும் பைல் ரெகவர் செய்ய குறிப்புகள்:

மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யும்பொழுது 2 வகையான கேள்விகள் கேட்கும். எந்த வகையான பைல்களை Recover செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு All Files என்பதை தேர்ந்தெடுக்கவும். அல்லது உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்யலாம்.

recover all files easy way

அடுத்து, எதிலிருந்து பைல்களை மீட்க வேண்டும் என கேட்கும்.

recover all files deleted from recycle bin

நான் “Recycle Bin” என்பதை தேர்வு செய்திருக்கிறேன். உங்களுக்குத் தேவையான ஆப்சனை தேர்ந்தெடுத்து “நெக்ஸ்ட்” கொடுத்தால், வரும் பக்கத்தில் “Enable Deep Scan” , “Enable Raw File Recovery” என்ற செக் பாக்சில் டிக் மார்க் கொடுத்து, “Start” கொடுத்தால் ஸ்கேன் ஆக ஆரம்பிக்கும். முடிவில் “ரெகவர்” செய்த பைல்களின் பட்டியல் காட்டும். அதில் தேவையான ஃபைல்களை டிக் செய்து “ரெகவர் ஃபைல்”  கொடுத்தால், அந்த பைல்கள் அனைத்தும் ரெகவரி ஆகிவிடும்.

பயனுள்ள இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி:

Download Free Data Recover Software – iSkysoft Data Recovery

Tags: Free Data Recovery Software, iSkysoft Data Recovery, File Recovery Tool, Recycle bin Files Recovery, Recovery File Software, Recover Deleted Files From Recycle Bin.

By admin

3 thoughts on “அழித்த டேட்டாவை மீட்க உதவும் Data Recovery மென்பொருள்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *