வெள்ளம், சுனாமி, புயல் போன்ற இயற்கை பேரழிவுகளின்பொழுது ஏற்படும் சேதங்களை குறித்து நேரடியாக விளக்க பயன்படுத்தப்பட்டு வருவபை Drone எனும் குட்டி ரக விமானங்கள். இந்த ரக விமானங்கள் அளவில் சிறியதாக இருப்பதால் மனிதர்கள் புக முடியாத இடத்திற்கு கூட சென்று, அங்கு உள்ள சூழ்நிலைகளை படம் பிடித்து வர பயன்படுத்தப்படுகிறது.

one man drone

தற்பொழுது தமிழகத்தில் பிரபல டிவி சேனல்கள், பிரச்னைக்குரிய அல்லது சீற்றத்திற்கு உட்பட்ட இடங்களை படம் பிடிக்க இந்த வகை விமானங்களைத்தான் பயன்படுத்துகின்றன. இந்த வகை விமானங்களில் அதிக சக்தி வாய்ந்த கேமிராக்களைப் பொருத்தப்பட்டிருக்கும். அந்த கேமிரா மூலம்  Bird View வீடியோக்களை எடுத்து அவற்றை டிவி சேனல்கள் டெலிகாஸ்ட் செய்கின்றன. டிவி சேனல்கள் மட்டுமல்ல.. புதிய இடங்களை ஆராய்ச்சி செய்பவர்கள், மின்சார வழித்தடங்களின் பாதிப்பு அறிய, ராணுவ ரகசிய இடங்களை அறிய என பலதரப்பட்ட துறைகளிலும் இந்த குட்டி வகை விமானம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

thaniyangi vaanoorthi

கேமராவுடன் தற்பொழுது ஒரு தனி நபர் ஒருவர் பயணம் செய்யத்தக்க வகையில் ஒரு சக்தி வாய்ந்த ட்ரோன் வகை விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. கேமிராவுடன் ஒரு தனி மனிதரும் அதில் பயணம் செய்யலாம். இயற்கை சீற்றம், பேரழிவு காலங்கள் மற்றும் போராட்ட காலங்களில் இதுபோன்ற விமானங்களில் டிவி ஆங்கர்கள் பயணித்து, அங்குள்ள சூழ்நிலைகளை விளக்கினால் ஆச்சர்யபடுவதற்கில்லை.

சீனத் தயாரிப்பான இந்த  குட்டி விமானத்தை பெய்ஜிங் இ-ஹாங் கிரியேசன் சயின்ஸ் & டெக்னாலஜி லிமிட்டட் (Beijing Yi-Hang Creation Science & Technology Co., Ltd) என்ற நிறுவனம் வடிவமைத்து வெளியிட்டுள்ளது.  வெகு விரைவில் இந்த வகை குட்டி ரக விமானங்கள் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ:
[youtube https://www.youtube.com/watch?v=F8shiw6zY_A]

Tags: Trone Plane, Trone Flight,

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *