ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து விட்ட இந்தச் சூழலில் நமது பயன்பாட்டிற்க்கு ஏற்ற வகையில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் ஸ்மார்ட்போன்களின் இன்டெர்னல் ஸ்டோரேஜினை அதிகரித்தே தயாரித்து வெளிவிடுகின்றன.

smartphone storage tips in tamil

அப்படியிருந்தபோதிலுமே,ஸ்மார்ட்போன்களின் நமக்கான எண்ணற்ற பயன்பாடுகள் காரணமாக அதன் ஸ்டோரேஜ் விரைவிலேயே தீர்ந்துபோய்விடுகிறது.அதாவது ஸ்டோரேஜ் முற்றிலுமாக நம்மால் பயன்படுத்தப்டுகிறது.

அப்படியான,ஸ்டோரேஜ் முழுமையடைந்துவிட்ட நிலையில் நாம் என்ன செய்யவேண்டும் என்பது குறித்த தகவல்கள் கீழே.

பேஸ்புக்:

உங்கள் ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் முழுமையடைந்துவிட்ட நிலையில் வேறு ஏதேனும் தேவையானவற்றை பாதுகாக்கவோ இயலவில்லை எனில் முதலில் நீங்கள் முகநூல் உபயோகிப்பாளரா என பார்க்கவேண்டும்.ஆமாம் எனில் அத்தியாவசியமான தேவையெனில் முகநூல் செயலியை அன்இன்ஸ்டால் செய்வதன் மூலம் தேவையான ஸ்டோரேஜினை நாம் பெறலாம்.

ரூட் செய்வதன் மூலம்:

இப்போது பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் புதிதாக நாம் வாங்குகையிலேயே சில பல ஆப்ஸ்களை கொண்டு வெளிவருகின்றன.அவற்றில் நமக்கு தேவையானவை எதோ அதனைத் தவிர்த்து பிறவற்றை அன்இன்ஸ்டால் செய்துவிடுவதன் மூலமாகவும் நாம் நமக்கு தேவையான ஸ்டோரேஜினை பெறலாம்.

கிளவுட் ஸ்டோரேஜ்:

இப்போது ஸ்மார்ட்போன்கள் வழியாக எடுக்கப்படுகின்ற புகைப்படங்களே அதிக்கப்படியான அளவினோடுதான் உள்ளன. கிளவுட் ஸ்டோரேஜ் என்கிற இந்த வசதியினை நாம் பயன்படுத்துவதன் மூலம் நமது மொபைலில் அதிகப்படியான ஸ்டோரேஜ் பயன்படுத்தப்படுவதனை நாம் தவிர்க்கலாம்.

ஆப்ஸ்கள்:

பெரும்பாலும் குறைந்த ஸ்டோரேஜினை பயன்படுத்துகிற ஆப்ஸ்களை நாம் பயன்படுத்துவதன் மூலமாகவும் நமது ஸ்மார்ட்போனில் நாம் அதிகப்படியான ஸ்டோரேஜினை இழக்கவேண்டியிருக்காது.நமக்கு தேவையான ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்யும் போதே அந்த ஆப்ஸ் நமது மொபைலில் எவ்வளவு இடத்தினைப் பயன்படுத்தும்.என்பது குறித்த தகவல்கள் நமக்கு காட்டப்படும் அதன் வழியாக நமக்கு தேவையானவற்றை நாம் சரியாக தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

மெமரி கார்டு:

அதிகப்படியான இடத்தினை பயன்படுத்துகிற ஆப்ஸ்களை நாம் நமது மெமரி கார்டிடுக்கு மூவ் செய்து கொள்ளலாம்.அதாவது குறிப்பிட்ட ஆப்பினை மெமரி கார்டில் பேக்அப் அடுத்து இன்ஸ்டால் செய்துகொண்டு பயன்படுத்துவதன் வழியாகவும் நாம் நமது ஸ்மார்ட்போனில் அதிகப்படியான ஸ்டோரேஜ் இழப்பினை தடுக்கலாம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *