கணினி வன்தட்டினை பல்வேறு பாகங்களாக பிரித்துக் கொள்ளவும் அவற்றின் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தவும் அதன் ஆங்கில எழுத்தை (Driver Letter) மாற்றிக் கொள்ளவும் Windows கணினியிலேயே வசதி தரப்பட்டிருந்தாலும் அவற்றினை மூன்றாம் நபர் மென்பொருள்களை பயன்படுத்தி செய்யும் போது அதனை மிக இலகுவாக மேற்கொள்ள முடிவதுடன்  Windows கணினியில் தரப்படாத மேலதிக வசதிகளையும் பெறமுடியும்.

MiniTool Partition Wizard Professional

அந்தவகையில் MiniTool Partition Wizard எனும் மென்பொருளானது எமது கணினி வன்தட்டினை நிர்வகிப்பதற்கு என எராளமான வசதிகளை தருகின்றது.

இந்த மென்பொருள் மூலம் பின்வரும் வசதிகளை பெற முடியும்.

Resize/Move – உங்கள் கணினி வன்தட்டின் ஒரு பாகத்தின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்த முடிவதுடன் அவற்றினை நகர்த்த முடியும்.

Create/Delete/Format – வன்தட்டில் புதிய ஒரு பாகத்தினை உருவாக்கவும் அதனை நீக்கவும் முடிவதுடன் குறிப்பிட்ட பாகத்தில் உள்ள தரவுகளை நீக்கிக் கொள்ளவும் முடியும்.

Merge Partition – இரு வேறு பாகங்களை ஒன்றிணைக்க முடியும்.
Split – குறிப்பிட்ட ஒரு பாகத்தினை வெவ்வேறாக பிரித்துக் கொள்ள முடியும்.
Partition/Disk Copy- கணினியில் உள்ள வன்தட்டின் குறிப்பிட்ட ஒரு பாகத்தினை copy செய்து கொள்ள முடியும்.

Convert Disk – Dynamic வகையில் உள்ள வன்தட்டின் பாகத்தினை Basic முறைக்கு மாற்றிக்குள்ள முடிவதுடன் Basic வகையில் அமைந்துள்ள பாகத்தினை Dynamic முறைக்கு மாற்றிக்கொள்ளவும் முடியம்.

Convert File System – NTFS முறையில் அமைந்திருக்கும் வன்தட்டின் பாகத்தினை FAT முறைக்கும் FAT முறையில் அமைந்திருக்கும் வன்தட்டின் பாகத்தினை NTFS வகிக்கும் மாற்ற முடியுமான அதே வேலை MBR ஐ GPT இற்கும் GPT ஐ MBR இற்கும் மாற்றிக்கொள்ள முடியும்.

இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் இந்த மென்பொருளின்  விலை மதிப்பு 39 அமெரிக்க டாலர்கள் ஆகும்.

பின்வரும் இணைப்பின் மூலம் குறிப்பிட்ட மென்பொருளை தரவிறக்கிக் கொள்ள முடிவதுடன் அதற்கான இலவச Licencee Key ஐயும் பெற்றுக்கொள்ள முடியும்.

Download MiniTool Partition Wizard Professional 

Tags: Free software, Hard Disk Maintenance Software, Hard disk Software, Tamil Free Software info.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *