கணினியில் இருக்கக் கூடிய மென்பொருள்களை நாம் துவக்கும் போது அவைகள் கணினியில் உள்ள RAM நினைவகத்தில் ஊடாகவே துவக்கப்படுகின்றது.

எனவே கணினியில் உள்ள RAM நினைவகமானது 1 GB அல்லது அதற்கும் குறைவானதாக இருக்கும் போது குறிப்பிட்ட மென்பொருள்கள் துவங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதுடன் ஒன்றுக்கு மேற்பட்ட மென்பொருள்களை நாம் பயன்படுத்துகையில் அது கணினியை நிலைகுலையச் (Hang)   செய்துவிடும் சூழ்நிலைகள் ஏற்படுவதுண்டு.

இது போன்ற சந்தர்பங்களில் USB Flash Drive சாதனத்தை RAM நினைவகமாக பயன்படுத்துவதற்கான வசதி விண்டோஸ் கணினிகளில் தரப்பட்டுள்ளது.

Ready To Boost என அழைக்கப்படும் இந்த வசதியை விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7/8/8.1/10 இயங்குதளம் நிறுவப்பட்டுள்ள கணினிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த வசதியை செயற்படுத்திக் கொள்வதன் மூலம் உங்கள் கணினி முன்பிலும் பார்க்க அதிகரித்த செயற்திறனுடன் செயற்படுவதை உணரலாம்.

இந்த வசதியை உங்கள் விண்டோஸ் கணினியில் செயற்படுத்திக் கொள்ள உங்கள் USB Flash Drive சாதனமானது குறைந்தது 256 MB வெற்று இடைத்தையாவது (Free Space) கொண்டிருத்தல் வேண்டும்.

மேலும் குறிப்பிட்ட USB Flash Drive சாதனம் வேகமாக தரவுகளை வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் (Read/Write) ஏதுவானதாக இருத்தல் வேண்டும். (ஆரம்பத்தில் வெளிவந்த USB Flash Drive சாதனங்கள் இதற்கு பொருத்தமற்றது.)

இனி உங்கள் USB Flash Drive சாதனத்தை RAM Drive ஆக பயன்படுத்துவதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.

முதலில் உங்கள் USB Flash Drive சாதனத்தை கணினியுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் My Computer பகுதியில் தோன்றும் குறிப்பிட்ட USB Flash Drive சாதனத்தை Right Click செய்து Properties செல்க.

இனி தோன்றும் சாளரத்தில் Ready To Boost என்பதை சுட்டுக.

பின் தோன்றும் பகுதியில் USE This Device என்பதை தெரிவு செய்து குறிப்பிட்ட USB Flash Drive சாதனம் மூலம் RAM நினைவகத்துக்காக ஒதுக்கப்பட வேண்டிய இட அளவை தெரிவு செய்க.

இறுதியாக Apply ===> OK என்பதை சுட்டுக.

அவ்வளவு தான்.

Tags: Pendrive as a Ram, Ram pen-drive, Pendrive to Ram, Computer tips, Tamil Computer tricks.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *