உங்கள் கணினி துவங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா? அப்படியாயின் அதற்கு முக்கிய காரணம் உங்கள் கணினி துவங்கும் போது துவங்க ஆரம்பிக்கும்  மற்ற மென்பொருள்களின் செயல்பாடுதான்.

how to get rid of windows 7 slow startup

விண்டோஸ் கணினியில் நிறுவும் பெரும்பாலான மென்பொருள்கள் நம்மை அறியாமலேயே Startup எனும் கோப்புறைக்குள் நுழைந்து கொள்கின்றன இதனால் அவைகள் கணினி துவங்க ஆரம்பிக்கும் ஒவ்வொரு தடவையும் அவைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.

அதனால் கணினியில் உள்ள CPU, RAM போன்றவைகள் உச்ச அளவில் பயன்படுத்தப்படுகின்றது. எனவே கணினி சில சந்தர்பங்களில் நிலைகுலைந்து நிற்கும் சந்தர்பங்களும் ஏற்படுவதுண்டு.

இவ்வாறான மென்பொருள்களை கண்டறிந்து அவற்றின் செயற்பாட்டை தடை செய்வதன் மூலம் உங்கள் கணினியின் வேகமாக செயற்பாட்டுக்கு உதவுகின்றது Quick Startup எனும் இலவச மென்பொருள்.

இதனை தரவிறக்கி நிறுவிய பின் உங்கள் கணினியின் துவக்கத்தில் இயங்க ஆரம்பிக்கும் மென்பொருள்களை கண்டறியவும் தேவையற்ற மென்பொருள்களின் செயற்பாட்டை இடைநிறுத்திக் கொள்ளவும் முடியும்.

நீங்கள் உங்கள் கணினியில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள், திரையில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சை கட்டுப்படுத்தி உங்கள் கண்களை பாதுகாப்பதற்கான மென்பொருள்கள், மற்றும் Clip Board ஐ நிர்வகிக்கக் கூடிய மென்பொருள்கள் போன்றவற்றின் செயற்பாட்டை தடை செய்யாமல் இருப்பது நல்லது.

காரணம் இவைகள் கணினியில் எந்த ஒரு நேரத்திலும் பயன்படக்கூடிய மென்பொருகள் ஆகும்.எனவே அவைகள் கணினி துவக்கித்தில் இயங்க ஆரம்பிப்பது சிறந்த பலனை தரும்.

தொடர்புடைய இடுகை: உங்கள் கணனி, மற்றும் Android சாதனங்களின் மிக வேகமான செயற்பாட்டுக்கு உதவும் இலவச மென்பொருள்

மேற்கூறிய வகையில் தேவையற்ற மென்பொருள்களின் செயற்பாட்டை தடைசெய்த பின்பும் உங்கள் கணினி மெதுவாக துவங்குவதனை நீங்கள் உணர்ந்தால் மேலே குறிப்பிட்டது போன்ற முக்கியமான மென்பொருள்கள் துவங்க எடுக்கும் நேரத்தினை பிற்போடும் வசதி (Startup Delay) இந்த Quick Startup மென்பொருளில் தரப்பட்டுள்ளது.

Quick Startup கணினி மென்பொருள் 

எனவே முக்கியமான மென்பொருள்கள் இயங்க ஆரம்பிக்கும் நேரத்தினை பிற்போடுவதால் உங்கள் கணினி வேகமாக துவங்கிவிடும் அதேவேளை குறிப்பிட்ட மென்பொருளும் சற்று நேரத்தின் பின் தானாகவே இயங்க ஆரம்பித்து விடும்.

மேலும் உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள ஒரு மென்பொருள் கணினி துவக்கத்தில் ஆரம்பிப்பது பயனுள்ளதா? என்பதயும் இந்த மென்பொருள் குறிப்பிட்ட மென்பொருளுக்கு வழங்கும் நட்சத்திர புள்ளிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

எனவே கணினி துவக்கத்தின் போது குறிப்பிட்ட ஒரு மென்பொருளின் செயற்பாட்டை தடைசெய்வது சிறந்ததா? என உங்களுக்குள் எழும் கேள்விக்கும் இந்த மென்பொருள் விடை தருகின்றது.

நீங்களும் இதனை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Download Free Quick Startup software

Tags: Free Software, Computer Free Software, Computer Speedup Software, Tamil Free software info, Computer optimize Software.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *