Mobile data management apps

மொபைல் வழியாக குறைந்த டேட்டா பிளானில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்னை அதிவேகமாக டேட்டா குறைந்து விடுவதுதான். மாதம் முழுமைக்கும் அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். அதைத் தவிர்த்து குறைந்த டேட்டா பிளானிலேயே மாதம் முழுவதும் இன்டர்நெட் அனுபவிக்க ஒரு சில வழிமுறைகள் (டிப்ஸ்) உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

mobile data managing app

1. கூகிள் குரோம் பிரௌசரில் டேட்டா  கம்பரஷ்ன் என்ற அம்சம் உண்டு. அதைப் பயன்படுத்தி மொபைலில் பிரௌஸ் செய்யும்பொழுது டேட்டா பயன்பாடு குறைந்த அளவே செலவாகும்.

இந்த வசதியை செயல்படுத்த, க்ரோம் மெனு சென்று Settings > Data Saver க்ளிக் செய்தால் போதும்.

2. மொபைல் உள்ள ஆப்ஸ்கள் அப்டேட் ஆகும்போதுதான் அதிகளவு டேட்டா செலவு ஆகும். மொபைல் ஆப்ஸ் அப்டேட்ஸ் அனைத்தும் வைஃபை கனெக்சன் மூலம் ஆகுமாறு செய்யலாம். இதனால் மொபைல் டேட்டா குறைவதை தடுக்கலாம்.

இதைச் செய்ய மொபைலிலேயே செட்டிங்ஸ் உண்டு. கூகிள் ப்ளேஸ்டோர் செட்டிங்ஸ் சென்று மொபைல் ஆப்ஸ் அப்டேட்ஸ் Wifi மூலம் ஆகுமாறு கிளிக் செய்து, செட்டிங்ஸ் மாற்றிக்கொள்ள வேண்டும்.

3. ஆன்லைனில் வீடியோ பார்ப்பதை தவிர்க்கலாம். இதன் மூலம் அதிகளவு டேட்டா சேமிக்க முடியும். வைஃபை கனெக்சனில் இருக்கும்பொழுது ஆன்லைன் வீடியோக்களை பார்க்கலாம்.

4. மொபைல் டேட்டா மேனேஜ்மெண்ட் ஆப்ஸ்களை பயன்படுத்தலாம். இந்த வகையான ஆப்ஸ்கள் ஐம்பது சதவிகிதம் வரை மொபைல் டேட்டாவை குறைக்கப்பயன்படுகிறது. (கூகிள் ப்ளே ஸ்ரோடில் Mobile Data Management apps எனத்தேடி அவற்றை டவுன்லோட் செய்துகொள்ளலாம்)

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *