Mobile smartphone-based electronic fetal heart rate monitor

app for fetal heart rate monitor

கர்ப்ப காலத்தின் போது குழந்தையின் இதயத்துடிப்பை மிகத் துல்லியமாக அறியும் மொபைல் ஆப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜோஷ்வா ஒக்கேலோ என்ற கல்லூரி மாணவர் ‘வின்செங்கா (WinSenga)’ எனும் மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதை தனது நண்பர் ஆரோன் டுஷாபேவுடன் உதவியுடன் கண்டுபிடித்துள்ளார்.

உலகின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் பொருளாதார நெருக்கடியும், போதிய அளவில் மருத்துவக் கருவிகள் இல்லாமையும், பிரசவத்தின் போது பிறக்கும் குழந்தைகளும், தாய்மார்களும் இறந்து போவதற்கு காரணமாய் அமைகின்றன.

இதன் காரணமாகவே இவர்கள், இந்த மொபைல் ஆப்பினை உருவாக்கியுள்ளனர்.

பழைய கருவியான பின்ஹார்ட் ஹார்னை நவீனப்படுத்தி, மொபைல் போனுடன் பொருத்தி, இந்த ஆப்பினை ஆன் செய்தால், குழந்தையின் இதயத்துடிப்பை, மிகத்துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும்.

மொபைலை, ஹெட் போனுடன் கனெக்ட் செய்வதால், தாயாலும், குழந்தையின் இதயத்துடிப்பை கேட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு கர்பிணி பெண்களுக்கும் இந்த வகை ஆப் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *