சமூக வலைத்தளங்களில் நல்ல விஷயங்கள் பல இருப்பினும், அதை தவறாக பயன்படுத்துபவர்கள் இருக்கின்றனர்.  பொய்யான செய்திகளை பரப்புவது, அவதூறு செய்வது போன்ற குற்றங்களுக்காக பயனர்கள் தண்டிக்கப்பட  வந்த நிலையில்,  தற்பொழுது ஜெர்மனி புதிய சட்ட மசோதா ஒன்றினை உருவாக்கி செயல்படுத்த உள்ளது.

அதன்படி பேஸ்புக் முதலான சமூக வலைத்தளங்களில் பதியபடும் வெறுப்பு பதிவுகள், பொய்யான தகவல்களை ஒரு நாளுக்குள் நீக்கி விட வேண்டும். அப்படி நீக்காவிட்டால் தொடர்புடைய சமூக வலைத்தளத்திற்கு 50 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்படும்.

facebook germany

இந்த புதிய சட்ட மசாதாவுக்கு பேஸ்புக் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. பொய்யான தகவல்கள், வெறுப்பு தகவல்களை எதிர்கொள்ள இது சரியான முறையல்ல என பேஸ்புக் தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டில் பேஸ்புக், ட்விட்டர் தளங்கள் ஜெர்மனிக்கு ஒரு உறுதியளித்திருந்தன. அதன் படி பொய் தகவல்கள், வெறுப்பு பதிவுகளை பதிவேற்றபட்ட ஒரு நாளைக்குள் அதை நீக்கிவிடுவோம் என தெரிவித்திருந்தன. ஆனால் திட்டமிட்டபடி அவ்வாறு நடக்கவில்லை. அதனையடுத்துதான் ஜெர்மனி புதிய மசோதாவை கொண்டுவந்துள்ளது.

இந்த சட்ட மசோதாவுக்கு ஏப்ரல் 5ந்தேதியே ஜெர்மனி அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டது. ஜெர்மன் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தால் மசோவானது சட்டமாக்கப்படுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி பேஸ்புக் நிறுவனம் கூறுகையில், பொய்யான தகவல்கள், வெறுப்பு பதிவுகள் குறித்த அரசியல் ரீதியான முயற்சிகள் வரவேற்கத்தக்கது. ஆனால், அளவுக்கதிகமான அபராதம் போன்றவை சட்டப்பூர்வமானது அல்ல.. என தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது
google_ad_client = “ca-pub-2152010975483882”; google_ad_slot = “9637535650”; google_ad_width = 300; google_ad_height = 250; google_language = “en”;
Tags: Facebook, Twitter, Germany, Rule, Fine, Money

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *