அதிக நேரம் மொபைல் இருளில் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளில் ஒன்றுதான் ஸ்மார்ட்போன் குருட்டுத்தன்மை. படுக்கை அறையில் எந்த ஒரு விளக்கு ஒளியும் இல்லாமல் இருளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெற்றோர்களுக்குத் தெரியாமல், அல்லது தனிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்று இளைஞர்கள் ஆபத்தறியாமல் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர்.

அவசியமாக இருக்க வேண்டிய பொருள் அத்தியாவசியமாக மாறிவிட்டால், அதற்கு அடிமையாகிவிட்டோம் என்றுதான் பொருள். விஞ்ஞான வளர்ச்சியின் அதி முக்கியத்துவமாக விளங்குவது தகவல் தொழில்நுட்பம். அதன் பாதை நீண்டு கொண்டே போகிறது. வேகம் அசுரத்தனமானது. அதில் சிக்கி மீண்டு வருவது என்பது மிக மிக கடினம். ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதும் அப்படித்தான்.

Smartphone kuruttuthanmai

அவசியமாக இருந்த ஒன்று தற்பொழுது அத்தியாவசியமாக மாறி, நம்மை ஆளுமை செலுத்துகிறது. அதற்கு அடிமைப்பட்டே போனோம். குறிப்பாக இளைஞர்கள். இருப்பத்து நான்கு மணி நேரமும் மொபைலும் கையுமாக திரிபவர்கள் அதிகம். அதனால் ஏற்படும் பாதிப்புகளை மட்டும் உணர்ந்துகொண்டால் எவ்வளவு அடிமைத்தனமாக இருந்தாலும், அதன் மீது ஒரு வெறுப்பு உண்டாகவே செய்யும். 
அப்படி என்ன ஆழமான பாதிப்பு என்கிறீர்களா? அதுதான் ஸ்மார்ட்போன் குருட்டுத் தன்மை. படுக்கை அறையில் ஸ்மார்ட்போன் பயனபடுத்தும் பெண்களுக்கு நிலையற்ற பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு கண்ணில் மட்டும் பார்வை இழப்பை ஏற்படுத்தும். இதற்கு காரணம் இருட்டில் தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதுதான். 
குறிப்பாக சொல்லப் போனால் ஒருக்களித்து படுத்து ஸ்மார்ட்போன் பயன்படுத்தும்பொழுது ஒரு பக்கம் உள்ள கண்ணுக்கு போதுமான வெளிச்சம் கிடைப்பதில்லை. ஒரு பக்கம் உள்ள கண் தொடர்ச்சியாக ஒளியில் பார்வையை செலுத்துவதால் இரு கண்களுக்கும்  உள்ள பார்வை சமநிலை பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அதிக நேரம் ஸ்மார்ட்போன் மீது பார்வை செலுத்தும் கண் பாதிக்கப்படுகிறது. 
படுக்கையறையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அல்லது அறையில் போதிய வெளிச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு ஸ்மார்ட்போன் பார்க்க வேண்டும். 
பவர்புல் கேமிராவை விட நமது கண்கள் வெவ்வேறு ஒளி நிலைகளை கையாள தெரிந்திருந்தாலும், இதுபோன்று தவறுதலான ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் விரைவில் களைத்து பாதிப்புக்கு உள்ளாகும். 
பொதுவாகவே, ஸ்மார்ட்போன் பயன்பாட்டை இருட்டில், படுக்கை அறையில் வைத்துக்கொள்வது உடல் நலனுக்கு, கண்களுக்கு உகந்ததல்ல. முடிந்தளவு இருளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுவதே நல்லது. 

தொடர்புடைய தகவல்:

Tags: Smartphone, Smartphone Tips, Tamil Tech Tips, Smartphone Blindness, Eye Protect From Smartphone, Smartphone Kurututhanmai, Mobile Eye Protection. Mobile Blindness precaution.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *