சில நேரங்களில் ஸ்மார்ட்போன் அளவுக்கு அதிகமான வெப்பத்தால் தானாகவே ஷட்டவுன் ஆகிவிடும். இதறக்கு என்ன காரணம்? எதனால் இப்படி ஓவர் ஹீட் ஆகிறது? அப்படி ஆகாமல் எப்படி தடுப்பது என்பது போன்ற விடயங்களை இங்கு தெரிந்துகொள்வோம். அதற்கு முன்பு, இதுவரைக்கும் எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யாதவர்கள் ஒருமுறை லைக் பட்டனை தட்டி (கிளிக்) விடுங்கள்.

https://www.facebook.com/plugins/like.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FThangamPalaniBlog%2F&width=450&layout=standard&action=like&size=small&show_faces=false&share=true&height=35&appId

smartphone overheating

அடிப்படையில் ஸ்மார்ட் போன் வெப்பமடைவதற்கு அதிக நேரம் பயன்படுத்துவதுதான் காரணம் என்றாலும், சில புற காரணிகளாலும் வெப்பம் மிகுதி ஏற்படும். அடிக்கிற வெயிலில் சாதாரணமாக பாக்கெட்டில் வைத்திருந்தாலே அதிக வெப்பம் உண்டாகும். அதற்குரிய கேஸ் களாலும் ஸ்மார்ட்போன் ஹீட் ஆகிறது.

பின்னணியில் இயங்கும் அப்ளிகேஷன்களால் அதிக மின்சாரம் எடுத்துக்கொள்வதால் கூட வெப்பம் ஏற்படும். எனவே தேவையற்ற பின்னணி அப்ளிகேஷன்களை நிறத்துவது அவசியமாகிறது.

மேலும் வழக்கமாக சொல்லப்படுகிற காரணங்கள்:

1. உங்களுடைய WiFi நீண்ட நேரமாக ஆன் செய்து வைத்திருப்பது
2. நிறைய நேரம் Game விளையாடுவது
3. உங்களுடைய Smartphone display Brightness அதிகமாக இருப்பது.

இப்படிப்பட்ட காரணங்களால் ஸ்மார்ட்போன் வெப்பமடையும் என்றாலும், இதைவிட அதி முக்கியமான காரணம் இதுவாகத்தான் இருக்கும்.

wifi on

கேமிரா செட்டிங்ஸ்:

நீண்ட நேரம் கேமிராவை பயன்படுத்துவது. மணிக் கணக்கில் வீடியோ ரெக்கார்டிங் செய்வதால் கண்டிப்பாக ஸ்மார்ட்போன் ஹீட் ஆகும்.போட்டோ / வீடியோ நன்றாக வரவேண்டும் என்பதற்கான  கேமரா செட்டிங்ஸ் highest Value வில் வைத்திருப்பது மிக முக்கியமான காரணமாக இருக்கும்.

smartphone camera settings

மால்வேர்:

மால்வேர் கூட உங்களுடைய ஸ்மார்ட்போன் ஹீட் ஆவதற்கு காரணமாக இருக்கும். மால்வேர் புரோகிராமர்கள் உங்களது டேட்டா மீதுதான் கண் வைப்பார்கள் என்றாலும், அது தொடர்ச்சியாக இயங்கி கொண்டே இருப்பதால் டச் போன் வெப்பமடைவதற்கு காரணமாக அமைகிறது. எனவே மால்வேர் மீதும் கண் வையுங்கள். ஸ்மார்ட்போனில் உள்ள மல்வேரை கீளின் செய்யுங்கள்.

ஸ்மார்ட்போன் உறை Case:

smartphone overheated case

அதிகமாக செல்போன் பயன்படுத்தும்பொழுது, பாதுகாப்புக்காக பயன்படுத்தும் உறையை அகற்றிவிடுவது நல்லது. இதனால் ஓவர் ஹீட் ஆவதை தடுக்க முடியும். பிளாஸ்டிக் போன்ற போன் கேஸ்கள் ஸ்மார்ட் போனிலிருந்து வெளிவரும் வெப்பத்தை வெளியே விடுவதில்லை. இதனால் ஸ்மார்ட்போன் அதிக வெப்பமடைகிறது.

Tags: smartphone overheating, fix overheating smartphone problem, how to avoid smartphone overheating, smartphone heating, solve smartphone heating issue, malware, wifi, camera, display, video recording, camera settings.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *