அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்த்து வேலை செய்யும் கண்கள் சீக்கிரமாகவே களைத்துப் போய்விடும். ஸ்கிரீனில் அதற்கு தகுந்த மாதிரி பிரைட்னஸ் அட்ஜஸ்ட் மெண்ட் கண்டிப்பாக இருக்க வேண்டும். அறையின் வெளிச்சத்திற்கு ஏற்ற மாதிரி ஸ்கிரீன் வெளிச்சம் அமைந்திருக்க வேண்டும்.  இல்லையென்றால் விரைவில் கண்கள் பழுதடைந்துவிடும்.

Reduce Computer-Related Eye Strain

ஒவ்வொருமுறையும், அறை வெளிச்சம், சுற்றுசூழல் வெளிச்சத்தை கண்காணித்து திரையின் வெளிச்சத்தை மாற்றிக் கொண்டிருக்க முடியாது. கண்களை பாதுகாக்கவும், சரியான வெளிச்சத்தை கம்ப்யூட்டர் திரை கொடுத்திடவும் சில மென்பொருட்கள் உள்ளன. இவை தானாகவே ஸ்கிரீன் வெளிச்சத்தை கண்களுக்கு தகுந்தாற் போல் மாற்றி அமைத்துக்கொடுக்கிறது.
அது மட்டுமா? ஆன்ட்ராய்ட் போன், டேப்ளட், லேப்டாப் போன்றவற்றில் கேம் விளையாடுவது, படிப்பது என நீண்ட நேரம் கண்கள் ஸ்கிரீனை பார்த்துக் கொண்டிருப்பதால் கண் நோய்கள் வரவும், கண் அழுத்தம், அழற்சி, பார்வை மங்கலாக தெரிவது போன்ற பாதிப்புகளும் ஏற்படும். 
இவற்றைத் தவிர்க்க கண்டிப்பாக இந்த மென்பொருட்கள் உங்களுக்கு உதவிடும்.
1. F.lux
இருப்பதிலேயே இதுதான் முதன்மையான மென்பொருள். இது கால நேரத்திற்கு (பகல்-இரவு)  தகுந்த மாதிரி ஆட்டோமேட்டிக்காக ஸ்கிரீன் பிரைட்னசை மாற்றிக்கொள்கிறது. ஒருமுறை செட் செய்துவிட்டால் போதும். மிக அருமையான மென்பொருள்.
விண்டோஸ், லினக்ஸ், ஐஓஎஸ், ஓஎஸ்எக்ஸ் இயங்குதளங்களுக்கு கிடைக்கிறது.
டவுன்லோட் செய்ய சுட்டி:

OS X, Windows, Linux, iOS

2. Awareness

இது ஒரு வித்தியாசமான மென்பொருள். தொடர்ந்து கம்ப்யூட்டர்/லேப்டாப்/ – ல் வேலை செய்து கொண்டிருக்கும்பொழுது, குறிப்பிட்ட இடைவெளியில் ரெஸ்ட் எடுக்க நினைவுபடுத்தும். எவ்வளவு நேரம் வேலை செய்ய போகிறீர்கள்? எத்தனை நிமிடங்கள் பிரேக் தேவைபடுகிறது, பௌல் சவுண்ட் வேல்யூம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை நீங்களே செட் செய்திடலாம். பிரேக் எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த மென்பொருள் உதவும்.

விண்டோஸ், மேக் கணிகளுக்கு கிடைக்கிறது.

டவுன்லோட் செய்ய சுட்டி:

OS X, Windows

3. Time Out Free

Apple Macintosh computer களுக்கான மென்பொருள் இது. இது ஒட்டுமொத்தமாக கம்ப்யூட்டர் ஸ்கிரீன் – டிஸ்பிளேயை டிம் செய்கிறது. எவ்வளவு நேரம் பிரேக் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. இதில் இரண்டு வகை ஒன்று. நார்மல் மோட். மைக்ரோ மோட். நார்மல் மோடில் நீண்ட நேரமும், மைக்ரோ மோடில் குறுகிய நேரத்திற்கும் பிரேக் எடுத்துக்கொள்ளும்படி அமைப்புகள் உள்ளது. இந்த அமைப்புகளை நீங்கள் மாற்றி அமைக்கலாம்.

டவுன்லோட் செய்ய சுட்டி:
OS X

4. Shades

இதுவும் ஆப்பிள் ஓஎஸ் 10 கம்ப்யூட்டர்களுக்கானது. இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்த பிறகு கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் கலர்ட் டின்ட் – ஐ அப்ளை செய்கிறது.
OS X
டவுன்லோட் செய்ய சுட்டி:

5. Pangobright

இது ஒரு அருமையான லைட் வெயிட் மென்பொருள். விண்டோஸ் கணினிகளில் இயங்க கூடியது.  இன்ஸ்டால் செய்த உடன் சிஸ்டம் டிரேயில் அமர்ந்துகொள்ளும். அதிக இடத்தை எடுத்துக்கொள்ளாது.  உங்களுடைய சிஸ்டம் பிரிப்ரென்சிற்கு தகுந்தாற் போல, மானிட்டரை டிம் செய்கிறது.

டவுன்லோட் செய்ய சுட்டி:
Downlaod Pangobright

6. EyeLeo

இது சிஸ்டம் டிரேயில் அமர்ந்து செயல்படும். பிரேக் எடுக்க வேண்டிய நேரத்தை முன் கூட்டியே தெரிவிக்கும். இதில் உள்ள சிறப்பம்சமே பிரேக் இடையில் கண்களுக்கு பயிற்சி கொடுப்பதுதான். இதில் உள்ள ஸ்ட்ரிக்ட் மோட் ஆக்டிவேட் செய்துவிட்டால், கட்டாயம் நீங்கள் ஓய்வு எடுத்தே ஆக வேண்டும். நீண்ட நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள மென்பொருள்.

7. Calise

இது லினக்ஸ் கம்ப்யூட்டருக்கான மென்பொருள். இது கம்ப்யூட்டரில் உள்ள வெப்கேம் மூலம் உங்களை சுற்றி உள்ள ஒளியை கிரகித்து அதற்கு ஏற்றது போல உங்களது மானிட்டரை மாற்றுகிறது. மிகச்சிறந்த மென்பொருள் இது.

டவுன்லோட் செய்ய சுட்டி:
Linux

8. Protect Your Vision

இது ஒரு பிரௌசர் எக்ஸ்டன்சன் ஆகும். குறிப்பிட்ட நேர இடைவெளியில் உங்களை ரெஸ்ட் எடுக்க அறிவுறுத்தும். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 செகண்ட்கள் ஓய்வு எடுக்கச் சொல்லும். அல்லது 20 அடிகள் நடக்க அறிவுறுத்தும். 20-20-20 பார்முலாவை கட்டாயப்படுத்தும் மென்பொருள் இது. தேவைக்கு ஏற்ப செட்டிங்சை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.

டவுன்லோட் செய்ய சுட்டி:

Chrome, Firefox Extension

9. Twilight

ட்வீட்லைட் மென்பொருள் ஸ்மார்ட் போனுக்கானது. படுக்கையில் தூங்க செல்வதற்கு முன்பு, நீங்கள் ஆன்ட்ராய்ட் போன் பயன்படுத்துபவர்களாக இருந்தால் கட்டாயம் இந்தமென்பொருள் பயன்படும். அறையில் உள்ள விளக்குகளை அணைத்த பிறகு ஸ்மார்ட் போன் பயன்படுத்தும்பொழுது அதிலிருந்து வெளிப்படும் அதிகபடியான வெளிச்சத்தை கட்டுப்படுத்த இந்தமென்பொருள் உதவிகரமாக இருக்கும். இது Flux மென்பொருள் போலவே செயல்படும். சுற்றுப்புற வெளிச்சத்திற்கு தகுந்தமாதிரி ஸ்கிரீனை மாற்றக்கூடியது.

டவுன்லோட் செய்ய சுட்டி:

Download Twilight for Android Phone

Tags: Screen Adjustment Software, tools for reduce eye strain, screen brightness control software, computer brightness adjustment tool. 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *