naadi thudippu ariya payanpadum menporul

சில நேரங்களில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதிசய வைக்கும். அந்தளவுக்கு நம்ப முடியாத விஷயங்களை கண்டுபிடித்து அசத்துவார்கள்.  அப்படித்தாங்க இதுவும். நாடித்துடிப்பு பார்க்கிறதுக்கு டாக்டர் டெதஸ்கோப், நாடி பிடிச்சி பார்ப்பாரு. அதெல்லாம் இல்லாம, வெறும் செல்போன் கேமிரா மூலம் நாடித்துடிப்பை (பல்ஸ்) பார்க்க முடியுமாம்.

அதுக்கான சாப்ட்வேர் ஒன்ன ஜப்பான் நிறுவனம் கண்டுபிடிச்சிருக்காங்க. அதை செல்போன்ல செயல்படுத்தினால் போதுமாம். அது முக அசைவுகள், அதிர்ச்சி மற்றும் முக எழுச்சியை வச்சி, பல்ஸ்சை கரெக்டா கண்டு பிடிச்சிடுதாம்.

அது மட்டுமில்லாம.. பிளட் பிரசர், மூச்சு விடும் வேகத்தையும் இது மூலம் கண்டுபிடிக்க முயற்சிகள் செய்துட்டு வர்றாங்களாம்.

இந்த சாப்ட்வேர் மட்டும் பயன்பாட்டுக்கு வந்ததுன்னா, அடிக்கடி லேப் போய், சுகர், பிளட் பிரசர் செக் பன்றதை தவிர்த்திடலாம். அதனால் காசு, பணம், மணி எல்லாம் மிச்சமாகும்.

அப்புறம் ரெகுலர் செக்கப்புக்கு போகும்போது, ஒருமுறை செக் பண்ணினாலே போதும்.

Software for checking human pulse, pulse checkup sofware

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *