ப்ளாக்கர் தளத்தில் புதிய வசதிகள் அவ்வப்பொழுது ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ப்ளாக்கர் தளங்களுக்கான புதிய டெம்ப்ளேட்களை ப்ளாக்கர் வெளியிட்டுள்ளது.

மூன்றாம் நபர் டெம்ப்ளேட்கள் பயன்படுத்தும்பொழுது, மால்வேர், வைரஸ் போன்ற பிரச்னைகள் வருவதற்கு சாத்தியம் உள்ளது. ஆனால் ப்ளாக்கர் தளத்தில் உள்ள டெம்ப்ளேட்களில் அதுபோன்ற எந்த ஒரு நிரல்களும் இல்லை. பயன்படுத்துவதும் சுலபம்.

new blogger theme released tamil info

புதிய தீம்களை பயன்படுத்துவது எப்படி?

  • ப்ளாக்கர் தளத்தில் லாகின் செய்துகொள்ளுங்கள். 
  • தீம்ஸ் என்பதை கிளிக் செய்து பாருங்கள்.
  • அதில் Contempo, Soho, Emporio, Notable என்ற நான்கு வகைகளில் தீம்கள் வெளியிடப்பட்டிருக்கும்.
  • அவற்றில் பிடித்தமான தீமை செலக்ட் செய்து அப்ளை செய்துகொள்ளலாம். 

நவீன வசதிகளுடன், மிக எளிமையான தீம்களை வடிவமைத்துள்ளனர்.
பார்ப்பதற்கும் அற்புதமாக உள்ளது.

குறிப்பு: புதிய தீம் அப்ளை செய்யும் முன்பு, உங்களுடைய பழைய தீமை(டெம்ப்ளேட்டை) ஒரு முறை டவுன்லோட் செய்துகொள்வது நல்லது. புதிய தீம் மாற்ற முயற்சிக்கும்பொழுது, பழைய டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்யவதற்கான எச்சரிக்கை விடுக்கப்படும். அதில் Download Theme என்பதை கிளிக் செய்து பழைய டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஏதேனும் பிரச்னை வரும்பொழுது , அல்லது புதிய தீம் உங்களுக்கு பிடிக்காத நிலையில் பழைய Theme ஐ மீண்டும் பயன்படுத்திக்கொள்ள அது உதவும்.

ப்ளாக்கர் தீம் மாற்றுவது குறித்த சந்தேகம் இருப்பின் கமெண்டில் தெரிவிக்கவும். அல்லது தொடர்பு கொள்ளவும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *