இருப்பது ஒரே ஒரு போட்டோ. உடனடியாக அந்த கம்பெனிக்கு ரெஸ்யூம் அனுப்பியே ஆக வேண்டும். போட்டோ ஸ்டுயோ சென்று போட்டோ எடுப்பதற்கும் வாய்ப்பு இல்லை. கையில் ஸ்மார்ட்போன் இருக்கிறது. போட்டோவை மெயில் மூலம் அனுப்பினால் போதும்.  போட்டோவை ஸ்மார்ட் போன் மூலம் போட்டோ எடுத்தால் அது கிளாரிட்டி குறைவாக இருக்கிறது. என்ன செய்யலாம்?

photo scan seyali

உங்களிடம் பழைய போட்டோக்கள் நிறைய இருக்கிறது. அவற்றை அப்படியே உங்கள் போன் / கம்ப்யூட்டர் / ஆன்லைன் ஸ்டோரேஜ் ல் சேமிக்க வேண்டும். அதை அப்படியே போட்டோ எடுத்தால் நன்றாகவே இல்லை. கிளாரிட்டி கிடைக்கவில்லை.  அதை ஸ்கேன் செய்ய கொடுக்கப்போனால், அதற்கு பணம் செலவாகும்? இந்நிலையில் என்ன செய்யலாம்.

இருக்கவே இருக்கிறது போட்டோ ஸ்கேன் அன்ட்ராய்டு செயலி. இது படங்களை அதன் இயல்பு தன்மை மாறாமல் உள்ளது உள்ளபடியே ஸ்கேன் செய்து தருகிறது. ஸ்கேன் செய்து, உங்கள் ஆன்ட்ராய்ட் போனில் சேமிக்கலாம். மெமரி கார்டில் சேமித்து, அதை வேறு கம்ப்யூட்டர் / பென்டிரைவ் போன்ற சேமிப்பகங்களுக்கு மாற்றிக்கொள்ளலாம். அல்லது பேஸ்புக், ட்விட்டர், வாட்சப் என நண்பர்களுக்கு பகிரலாம். 
அல்லது இன்டர்நெட்டில் கிடைக்கும் இலவச  சேமிப்பகங்களில் சேமிக்கலாம். உங்களது மலரும் நினைவுகளின் பொக்கிஷமாக இருக்கும் போட்டோக்களை பொக்கிஷமாக பாதுகாக்கலாம். அதற்கு துணைபுரிகிறது “போட்டோ ஸ்கேன்” செயலி. 
இப்படி நேரடி/மறைமுக பயன்களை கொண்ட இந்த அற்புதமான செயலியை டவுன்லோட் செய்ய சுட்டி: 
(ஆன்ட்ராய்ட் போன் மூலம் இந்த லிங்கை கிளிக் செய்து, இன்ஸ்டால் பட்டனை அழுத்தினால் போதும். உங்கள் ஸ்மார்ட்போனில் இச்செயலி நிறுவப்பட்டுவிடும். )

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *