சில மென்பொருட்களை தேவை கருதி இன்ஸ்டால் செய்து வைத்திருப்போம். பிறகு தேவை முடிந்ததும் அதை அன் இன்ஸ்டால் செய்திட முயற்சிப்போம். அப்போதுதான் பிரச்னை உருவாகும். அன் இன்ஸ்டால் ஆக மறுப்பதோடு, ஏதாவது ஒரு எர்ரர் மெசேஜை காட்டி பயமுறுத்தும்.

iobit unistaller for free 2017

என்னதான் முயற்சித்துப் பார்த்தாலும் அன் இன்ஸ்டால் ஆக மறுக்கும் அந்த மென்பொருள்  சிஸ்டத்தில் தேவையில்லாமல் தங்குவதோடு, குறிப்பிட்ட மெமரியை எடுத்துக்கொள்ளும். அதுபோன்ற அன்இன்ஸ்டால் ஆக அடங்க மறுக்கும் மென்பொருட்களையும் அகற்றித் தருகிறது IObit Uninstaller மென்பொருள். 
ஐஓபிட் அன்இன்ஸ்டாலர் மென்பொருள், பிரௌசரில் உள்ள தேவையற்ற  ஆட் ஆன் பேஸ்டு பிளகின்ஸ், மால்வேர் மற்றும் தேவையற்ற டூல்பார்கள் போன்றவைகளையும் அகற்றி Faster and Safe Browsing செய்வதற்கு வழிவகுக்கிறது.

பயனர்கள் சுலபமாக விண்டோஸ் அப்டேட் மேனேஜ் செய்ய உதவுகிறது. விண்டோஸ் அப்டேட்டின்போது ஏதேனும் பிரச்னை எனில், எளிதாக அவற்றை நீக்கி தருகிறது. தேவை எனில்  சிஸ்டம் ரீஸ்டோர் பாய்ண்டை ஏற்படுத்திடவும் பயன்படுகிறது. இதனால் அன்இன்ஸ்டால்க்கு பிறகு, ஏதேனும் பிரச்னை எனில் சிஸ்டம் ரீஸ்டோர் மூலம் கம்ப்யூட்டரை மீண்டும் முன்பு இருந்த நிலைக்கு கொண்டு வரமுடியும்.

மென்பொருள்கள் அன்இன்ஸ்டால் செய்யப்பட்ட பிறகு, அது தொடர்பான மற்ற மறைமுகமான பைல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றையும் கண்டறிந்து நீக்கித் தருகிறது. இதனால் கம்ப்யூட்டரின் வேகம் அதிகரிப்பதோடு, தேவையில்லாத பைல்கள் மெமரியை எடுத்துக்கொள்வதும் தவிர்க்கப்படுகிறது. 
இது முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. கட்டண மென்பொருளும் உண்டு. கட்டண மென்பொருளில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கும். 
பயனுள்ள IObit Uninstaller ஐ டவுன்லோட் செய்ய லிங்க்: 
Tags: Free Uninstaller, software uninstaller free, iobit uninstaller, program uninstaller, full uninstaller free, app unistaller, computer software uninstaller, windows patch file remover, windows update remover tool, illavasa menpoural, menporul nekkunar, menporul remover, free software, tamil tech free software. 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *