feature of whatsapp

உங்களுடைய ஸ்மார்ட் போனைச் சற்று உற்றுப் பாருங்கள். அதில் உங்களுக்கு வந்திருக்கும் மெசேஜ் அல்லது மெயில் பார்க்க அல்ல. உங்கள் ஸ்மார்ட் போன் எது எனப் பாருங்கள். எத்தனை ஆண்டுகள் பழையது எனப் பாருங்கள். ஊடக உலகில் வந்துள்ள தகவல்களின்படி, வாட்ஸ் அப் செயலி, வரும் 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர், பல லட்சம் ஸ்மார்ட் போன்களில் செயல்படாது என்ற தகவல் வந்துள்ளது.

அந்த போன்கள் அனைத்தும் மேம்படுத்தப்பட வேண்டும். அல்லது புதிய மாடல் ஸ்மார்ட் போன்கள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும்.

ஒரு மாத காலத்தில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நூறு கோடி என வாட்ஸ் அப் செயலி கொண்டுள்ளது. தொடர்ந்து தன் தொழில் நுட்பத்தினை மேம்படுத்திக் கொண்டு, தன் பயனாளர்களுக்குப் புதிய பல வசதிகளைத் தந்து வருகிறது. இதனால், ஸ்மார்ட் போன்கள் மேம்படுத்தப்பட்ட வகையில் இல்லை என்றால், வாட்ஸ் அப் செயலி அவற்றோடு இணைந்து செயல்பட முடியாதபடி ஆகிவிடும். 2016க்குப் பின்னர் நிச்சயம் இந்த நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய மொபைல் போன்கள், வாட்ஸ் அப் செயலியில் நாங்கள் தந்து கொண்டிருக்கும் தொழில் நுட்ப மேம்பாட்டினை மேற்கொண்டு செயல்படுத்தும் வகையில் இல்லை. எதிர்காலத்தில், இந்த செயலியின் மேம்படான நிலையுடன் இணைந்து செல்வதாக அவை இல்லை, என வாட்ஸ் அப் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளதாக, சில தொழில் நுட்ப இதழ்கள் கருத்து தெரிவித்துள்ளன.

வரும் ஆண்டுகளில், பெரும்பாலான மக்கள் தங்கள் மொபைல் சாதனம் மூலம் தான், தங்கள் அன்றாட வாழ்வின் பெரும் பணிகளை மேற்கொள்வார்கள். எனவே, அவற்றை மையப்படுத்தியே வாட்ஸ் அப் செயலியின் திறனும் மேம்படுத்தப்பட வேண்டும். இதனால், பழைய வசதிகள் சில 2017 முதல் செயல்படாது.

ஐபோன் பயனாளர்களுக்கு, அவர்கள் ஐபோன் 3 ஜி.எஸ். பயன்படுத்துபவர்களாக இருந்தால், வாட்ஸ் அப் அந்த போன்களில் செயல்படாது.

ஐ.ஓ.எஸ். 6 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் ஐபோன்களில், வாட்ஸ் அப் செயலிக்கு சப்போர்ட் கிடைக்காது. அதே போல, முதலாவதாக, இரண்டாவதாக, மூன்றாவதாக அல்லது நான்காவதாக அறிமுகம் ஆன ஐபேட் சாதன மாடல்கள் மேம்படுத்தப்படவில்லை என்றால், வாட்ஸ் அப் அவற்றில் செயல்படாது.

ஐபேட் பயன்படுத்துபவர்கள் தங்கள் சாதனங்களின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ஐ.ஓ.எஸ். 9.3 க்கு மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே, வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்ட் 2.1 அல்லது 2.2 பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களும், டேப்ளட் பி.சி.க்களும், 2016க்குப் பின், வாட்ஸ் அப் செயலியின் செயல்பாட்டிற்கான சப்போர்ட் பெறுவது சிக்கலாகிவிடும். ஆனால், வாட்ஸ் அப் வழங்கும் சப்போர்ட், பிளாக் பெரி ஓ.எஸ்., பிளாக் பெரி 10, நோக்கியா எஸ் 40 மற்றும் நோக்கியா சிம்பியன் எஸ்60 ஆகிய சிஸ்டங்களில் செயல்படும் போன்களுக்கு, 2017, ஜூன் 30 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Tamil Tech News, Whatsapp News, Whatsapp update.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *