microsoft surface phone

அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் மைக்ரோசாஃப்ட் “சர்ஃபேஸ் ப்ரோ” ஸ்மார்ட்போன்கள் கணினிக்கு நிகரான வேகத்தில் இயங்கும் என கூறப்படுகிறது.

மைக்ரோசொஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 2017 ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாக துவங்கியுள்ளன. ஆனால் குறித்த மொபைல் போன் தொடர்பான விபரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.

தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் இது சர்ஃபேஸ் போன் தான் என்றும், இது ஒரு ஹைப்ரிட் போனாக இருக்கும் என்பது தெரியவந்திருக்கிறது.

உலகம் அறிந்த முன்னணி பதிப்பாக காணப்படும் மைக்ரோசொஃப்ட் தான் தயாரித்து வரும் உயர் ரக ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஐ போனை விடவும் பெறுமதியானது என தெரிவிக்கப்படுகின்றது

மேலும் மைக்ரோசொஃப்ட் சர்ஃபேஸ் போன் குவால்காம் நிறுவனத்தின்அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டியாக இருக்கும் என்றும் இது வாடிக்கையாளர்களின் மொபைல் போன் பயன்பாட்டை அடியோடு மாற்றிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த மொபைல் போன் அடுத்த ஆண்டு மைக்ரோசொஃப்ட் வெளியிட இருக்கும் விண்டோஸ் 10 இன் செயற்பாடுகளை உள்வாங்கியிருக்கும் எனவும் நம்பப்படுகின்றது.

புதிய இயங்குதளம் என்பதால் இந்த ஸ்மார்ட்போன் அதிக சக்தி வாய்ந்ததாக இருப்பதோடு அதிநவீன வடிவமைப்பையும் கொண்டிருக்கும். விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டிருப்பதால் இந்த ஸ்மார்ட்போனினை கணினியாகவும் மாற்ற முடியும்.

குறித்த ஸ்மார்ட் போன் அடுத்த ஆண்டு மதல் நடைமுறைக்கு வரலாம் என நம்பப்படுகின்றது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போனின் விலை 699 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.47,179) முதல் 1100 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.74,244) வரை இருக்கும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: computer news, smartphone news, Smartphone Like Computer.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *