இணையம் உலா வர நமக்கு பிரவுசர் ஒன்று தேவைப்படுகிறது. பிரவுசர்களைக் கட்டணம் செலுத்தி யாரும் வாங்குவதில்லை. இலவசமாக, இணைய தளங்களிலிருந்து ஏதேனும் ஒன்றைத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கிக் கொள்ளலாம்.

the best browser 2016

இவற்றின் செயல்பாடுகளுக்கிடையே ஏதேனும் வேறுபாடு உள்ளதா என யாரும் பார்ப்பதில்லை. ஒன்றைப் பழக்கிக் கொண்டுவிட்டால், தொடர்ந்து அதனையே பயன்படுத்தும் பழக்கம் நம்மிடையே உள்ளது. ஏதேனும் ஒரு பிரச்னை ஏற்பட்டால், பிரவுசரை மாற்றுவதால் நம் பாதுகாப்பு அதிகமாகும் என்றால், பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் என்றால், உடனே நாம் வேறு பிரவுசருக்கு மாறிக் கொள்கிறோம்.

ஆனால், யாரும் இவற்றின் இயக்க முறைகளின் தன்மைகளில் உள்ள வேறுபாட்டின் காரணமாக, பிரவுசரைத் தேர்ந்தெடுப்பதில்லை. இருப்பினும் இந்த பிரவுசர்களிடையே குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு வேறுபாடான செயல் தன்மைகள் உள்ளன.

இணையத்தில் கிடைக்கும் கீழே குறிப்பிட்டுள்ள பத்து பிரவுசர்களின் செயல்முறைகளுக்கிடையேயான வேறுபாட்டினை இங்கு காணலாம். அந்த பத்து பிரவுசர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன: Avant Browser, Chrome, Deepnet Explorer, Firefox, Internet Explorer, Maxthon, Opera, Safari, Torch மற்றும் SeaMonkey.

வேகமான இணைப்பு: பிரவுசர் ஒன்றை இயக்கத் தொடங்கியவுடன், அது இணையத்தில் இணையும் நேரத்தினை இணைய இணைப்பில் ஆய்வு செய்தபோது, மொஸில்லாவின் பயர்பாக்ஸ் மிகக் குறைவான நேரத்தில் இணைப்பினைப் பெற்று செயல்பட்டது.

இதன் இணைப்பு நேரம் 1.55 விநாடிகள். இதனை அடுத்து குரோம் பிரவுசர், 1.56 விநாடிகளில் இணைந்து செயல்பட்டது. சபாரி 1.85 விநாடிகளில் இணைந்தது. இந்த சோதனையை ஒவ்வொரு பிரவுசரிலும் பத்து முறை, ஸ்டாப் வாட்ச் கொண்டு சோதனை செய்யப்பட்டே இந்த முடிவுகள் அறியப்பட்டன.

பிரவுசர் செயல்படத் தொடங்கியதிலிருந்து, ஓர் இணைய தளம் செல்வதற்கான நேரம் அடுத்து கணக்கிடப்பட்டது. இதில் டார்ச் பிரவுசர் 2.8 விநாடிகளிலும், பயர்பாக்ஸ் 3.2 விநாடிகளிலும், ஆப்பரா 3.29 விநாடிகளிலும் தளம் சென்றன. மற்றவை எல்லாம், மேலே காட்டிய சோதனைகளில் வேகம் குறைவாகவே செயல்பட்டன. இயக்கமுறைமைக்கு ஈடு கொடுத்தல்: மேலே சொல்லப்பட்ட பத்து பிரவுசர்களும், கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் எவ்வாறு செயல்படுகின்றன என்றும் சோதனை நடத்தப்பட்டது.

அந்த வகையில், அனைத்து பத்து பிரவுசர்களின் செயல்பாடுகளிடையே பெரிய அளவில் வேறுபாடு இல்லை. அனைத்தும் விண்டோஸ் இயக்கத்தினை சப்போர்ட் செய்தன. Avant Browser, Deepnet Explorer, Internet Explorer, மற்றும் Torch தவிர மற்றவை மேக் இயக்கத்தில் செயல்பட்டன.

Chrome, Firefox, Maxthon, மற்றும் Opera ஆகிய நான்கும் ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் சிறப்பாக இயங்கின. Chrome, Maxthon, Opera, மற்றும் Safari ஆகிய நான்கு மட்டும் ஐ.ஓ.எஸ். இயக்கத்தில் செயல்பட்டன.

தொழில் நுட்ப உதவி: பொதுவாகவே, இணைய பிரவுசர்களின் இயக்க முறை குறித்து அனைவரும் தெரிந்து வைத்துள்ளோம். இதற்குக் காரணம், இந்த பிரவுசர்களின் செட்டிங்ஸ் முறைகள் தெளிவாகக் காட்டப்படுவதே. மேலும், இந்த பிரவுசர்களின் இயக்கம் குறித்து நாம் பிரச்னைகளை எதிர் கொள்கையில், நமக்கு உதவிட பல இணைய தளங்கள் உள்ளன.

இவற்றிடமிருந்து நாம் பலவகை உதவிகளைப் பெற முடிகிறது.இருப்பினும், இந்த பிரவுசர்கள், பயனாளர்களுக்கு உதவிட, இணையத்திலேயே உதவி, பயனாளர்கள் குழு அமைப்பு, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும் (FAQ) என்ற பிரிவு மற்றும் மின் அஞ்சல் வழி உதவி எனப் பல வகைகளில் உதவுகின்றன.

அவாண்ட் பிரவுசர் தவிர மற்ற அனைத்து 9 பிரவுசர்களும் இணையத்தில் பயனாளர்கள் வழிகாட்டி (online user guide)யினை அமைத்து வழங்குகின்றன. Tutorials எனப்படும் விளக்க குறிப்புகளை, அவாண்ட் பிரவுசர் மற்றும் டீப்நெட் எக்ஸ்புளோரர் தவிர மற்ற அனைத்தும் தருகின்றன.மேலே தரப்பட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில், நாம் நமக்குத் தேவையான பிரவுசரைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.

ஆதாரம்: தினமலர்.கம்ப்யூட்டர் மலர்.

Tags: Best Browser 2016, Best Internet Browser, Top Browser 2016, Chrome Browser, Fast Browser, Firefox Browser, Opera Browser, Maxthon Browser 2016, Safari Browser 2016.

By admin

One thought on “எது பெஸ்ட் பிரௌசர்?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *