மொபைலில் பயன்படுத்தும் சிம்கார்டுகள் ஆரம்பத்தில் எப்படி இருந்தது தெரியுமா?

ஒரு கிரடிட் கார்டு சைஸ்க்கு இருந்தது. அந்த சிம்மின் அளவு 85.36 மிமீ நீளத்தில் வெளி வந்தது. ஆண்டு 1991. அதன் பிறகு 1996 ல் 2ff தர அளவில் 25 மி.மீ நீளத்தில் வெளிவந்தது. அதைத்தான் நாம் மினி சிம் என்கிறோம்.

sim cards

2003ம் ஆண்டுதான் நாம் ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் மைக்ரோ சிம் கார்டு வெளிவந்தது. அதன் பிறகுதான் 12.3 மிமீ நீளத்தில் நானோ சிம் வெளிவந்தது.

முதல் மூன்று சிம்களுக்கும் தடிமன் 0.76 மிமீ ஆகவும், நானோ சிம் தடிமன் 0.67 மிமீ ஆகவும் உள்ளது. இந்த தகவல் தொழில் நுட்ப உலகத்தில், ஏறத்தாழ கடந்த 25 ஆண்டுகளாக, மாறா நிலையில் உள்ளது இந்த மொபைல் சிம் தான்.

முதல் முதலில் வந்த (1FF) வரையறை கொண்ட சிம் ஒரு கிரெடிட் கார்ட் அளவில் இருந்தது. பின்னர், இதன் நீள, அகலம் தான் மாறி உள்ளதே தவிர, இதன் வடிவம் மாறவே இல்லை.

ஆதாரம்: தினமலர். மொபைல் மலர். 
Tags: Mobile Sim Cards, Normal Sim card, Micro Sim card, Nano Sim card.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *