Driver update software for Free and Paid

கம்ப்யூட்டர் என்பது வெறும் ஒரு பெட்டி அல்ல. அதில் பல பாகங்கள் உண்டு. அதில் இடம்பெற்றிருக்கும் பாகங்கள் ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது. அவைகள் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்ற பிறகு முழுமையா கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும்.

அதுபோலதான் கம்ப்யூட்டரில் உள்ள Operating System எனப்படும் இயங்குதளம் பிற வன்பொருட்களுடன் (கீபோர்ட், மௌஸ், ஸ்கிரீன் –  Keyboard, Mouse, Screen போன்றவைகள்) தொடர்பு கொண்டு இயங்க வேண்டுமானால் அந்தந்த வன்பொருளுக்கென உள்ள டிரைவர் ஃபைல்கள் இருக்க வேண்டியது அவசியம். அந்த பைல்கள் இருந்தால் மட்டுமே, ஆப்பரேட்டிங் சிஸ்டம், அவற்றுடன் இணைந்து செயல்பட முடியும்.

அதாவது ஆபரேட்டிங் சிஸ்டத்தையும், வன்பொருட்களை இணைக்கும் வேலையை செய்பவை இந்த Driver Files. அவைகள் முறையாக  அப்டேட் செய்யப்பட்டு இருந்தால் தான் கம்ப்யூட்டர் எந்த பிரச்னையின்றி இயங்கும். டிரைவர் பைல்கள் [Driver Files] குறிப்பிட்ட கால பயன்பாட்டிற்கு பிறகு  காலாவதியாகிவிடும். அல்லது செயல்பட போதுமான தகுதியை இழந்து விடும். அவ்வாறான சூழலில் கட்டாயம் அந்த கோப்புகளை அப்டேட் செய்ய வேண்டும். அதற்கு பயன்படுவைதான் டிரைவர் பூஸ்டர் எனும் மென்பொருள்.

free driver updating software

இது இலவச மென்பொருளாகவும் கிடைக்கிறது. கட்டணம் செலுத்தியும் பெறலாம்.

இலவசமாக கிடைக்கும் மென்பொருட்களில் வசதிகள் குறைவு. கட்டண மென்பொருளில் முழுமையான வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.  கட்டண மென்பொருளை பயன்படுத்து வதன் மூலம் ஆட்வேர், ஸ்பைவேர் போன்ற எக்ஸ்ட்ரா இத்யாதிகளை தவிர்க்க முடியும். டிரைவர் பூஸ்டர் மென்பொருள் தரவிறக்கம் செய்வதற்கான Download Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மென்பொருளை டவுன்லோட் & இன்ஸ்டால் செய்து, உங்களுடைய கம்ப்யூட்டர் டிரைவர் கோப்புகள் அப்டேட்டில் இருக்கிறதா என சோதித்து, தேவையான டிரைவர் கோப்புகளை அப்டேட் செய்துகொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டர் எவ்வித பிரச்னையுமின்றி இயங்கும்.

driver booster download

Driver Booster Download செய்ய சுட்டி (கட்டண மென்பொருள்): 

Download Driver Booster (Paid Version)

Driver Booster Download செய்ய சுட்டி (இலவச மென்பொருள்): 

இந்த பதிவு பிடித்திருந்தால் கீழுள்ள Share This பட்டன்களை அழுத்தி, நண்பர்களுக்கு பகிரவும். 

By admin

2 thoughts on “கம்ப்யூட்டரில் டிரைவர் அப்டேட் செய்ய உதவும் மென்பொருள் Driver Booster”
  1. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    சித்திரையாள் வருகை
    இத்தரையில் எல்லோரும்
    எல்லாமும் பெற்று வாழ
    எல்லோருக்கும் வழிகிட்டுமென
    புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
    இத்தால் உங்கள் யாழ்பாவாணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *