ஆப்பிள் போன் – ஆன்ட்ராய்ட் போன் எது சிறந்தது என கேட்டால் கண்டிப்பாக அன்ட்ராய்டு போன்தான் சிறந்தது என்று கூறலாம்.  காரணம் Android PHone யூசர் ப்ரண்ட்லியாக இருப்பதுதான். பயனர்களுக்கு தகுந்த மாதிரி எளிமையான கட்டமைப்புகளை கொண்டவற்றைதான் “User Friendly” என்கிறார். அதாவது, பயனர் தமக்கு ஏற்றபடி அவற்றை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

whatsapp android ragasiyangal

ஆன்ட்ராய்ட் போன் பயன்படுத்துபவர்கள் அப்படி மாற்றி அமைத்துக்கொள்கிறார்களா என்றால், நிச்சயமாக இல்லை. இருப்பது இருந்தபடியே உபயோகிக்கிறார்கள். பெரும்பாலான “ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்” உபோயோகிப்பாளர்கள் அப்படித்தான்.

ஆன்ட்ராய்ட் போன் ரகசியங்கள்:

Text To Speech – டெக்ஸ் – டூ – ஸ்பீச்

பெரும்பாலானவர்கள் ஆன்ட்ராய்டு போனில் இருப்பவற்றை (கட்டுரைகள்) வாசித்து அறிந்துகொள்கிறார்கள். ஆனால் அவற்றில் கட்டுரைகள்போன்ற டெக்ஸ்டுகளை ஒலி வடிவில் கேட்க முடியும். அதற்கு Settings ==> Accessibility ==> Text-to-speech output கொடுக்க வேண்டும். பிறகு, நீங்கள் ஆன்ட்ராய்ட் போனில் காண்பவற்றை ஒலி வடிவில் கேட்கலாம்.

பிரபலங்களின் வாட்சப் ஸ்டேடஸ்கள்:

  • நடிகர் சூர்யா: Give your best always..
  • நடிகர் கார்த்தி: எங்க ஊரு மெட்ராஸு… அதுக்கு நாங்க தானே அட்ரஸு…
  • நடிகை ஐஸ்வர்யா: என்ன வாழ்க்கைடா..
  • கௌதம் வாசுதேவ் மேனன்: learnt to be a filmmaket. Now trying to stay human
  • ஜெ.கே.ரித்தீஷ்: can’t talk watsapp only
  • நடிகை நந்திதா: Go out of my mind.
  • நடிகை காயத்ரி: Sometimes on the way to a dream, you get lost and find a better one.
  • நடிகர் அருள்நிதி: துணிவு இருந்தால் துக்கம் இல்லை.
  • இயக்குநர் ரஞ்சித் (மெட்ராஸ்): சாதி தான் இந்த சமுகம். எப்போது வீசும் காற்றில் விஷம் பரவும்?
  • ஐ.பி.எஸ். ரவி: It is none our bussiness what others think about you.
  • அனிருத்: wave after wave
  • நடிகை மனிஷா: Feel beautiful; look beautiful.
  • நடிகை சிம்ரன்: Deepak & me.
  • இயக்குநர் நலன் குமரசாமி: I reply only too long friends in watsapp. kai neelam.
  • நடிகை கனகா: Hey fool.
  • இயக்குநர் கோகுல் : What is right is not always popular & what is popular is not always right – albert einstein.
  • இயக்குநர் விஜய் மில்டன்: Dearm your film; film your dream.
  • நடிகை இஷாரா: No Power in this world can take me off from u… Love u. daaaggggguuuu.. mmuuahh..
  • ஆர்.ஜெ.பாலாஜி : பிஸ்தா சாப்பிடும் அளவுக்கு நான் மஸ்தவா?
  • நடிகை டாப்ஸி : Happiness is a matter of choice 🙂
  • நடிகை மோனிகா : Being human is human being.

வாட்சப் லைக் பட்டன்:

பேஸ்புக்கில் இருப்பது போலவே வாட்சப்பிலும் லைக் பட்டன் வரவிருக்கிறது. ஸ்டேடஸ் பிடித்திருந்தால் லைக் செய்து விருப்பத்தை தெரிவிக்கலாம்.

வாட்சப் கூத்து: படித்ததில் பிடித்தது:

பேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ் இவை எல்லாவற்றிலும் சில பல தகவல்கள் அனைத்தும் காப்பிகேட் – ஆகவே இருக்கும். அதற்கு பொருத்தமான தலைப்பாக “படித்ததில் பிடித்தது” என போட்டுக்கொண்டனர். அது போல தற்பொழுது வாட்சப்பிலும் அதிகளவு படித்ததில் பிடித்தது தகவல்களையே அதிகம் பகிர்கின்றனர்.

வாட்சப் மாதிரியே சில செயலிகள்:

வாட்சப் மாதிரியே சில செயலிகள் வெளிவந்துள்ளன. ஆனால் அவைகள் வாட்சப் அளவிற்கு பிரபல்யமாக இருக்கின்றனவா என்றால் இல்லை. வாட்சப் தான் என்றுமே டாப் கியரில் பயணிக்கிறது.

ஃபேஸ்புக் – மெசென்ஜர்

பேஸ்புக் வெளியிட்டுள்ள இந்த செயலி ஏறக்குறைய வாட்சப் மாதிரியே செயல்படுகிறது. லைட் வெயிட் அப்ளிகேசன் இது.

லைன் (Line)

ஜப்பான் பேஸ்புக் என்று அழைக்கப்படும் இந்த செயலியை 215 மில்லியன் பயனர்கள் பயன்படுத்துகின்றனர். இதில் 1GB வரையிலான கோப்புகளை “Share” செய்யலாம். வாட்சப் இதுபோல வசதியை பெற்றிருக்கவில்லை.

டெலிகிராம் (Telegram)

இது வாட்சப் செயலியை விட பெட்டர் என்று சொல்லாம். இதன் மூலம் அனுப்பபடும் தகவல்களை ஒரு சில நிமிடங்களில் தானாவே அழிந்துவிடும்படி செட் செய்திடலாம். இதில் குரூப் வசதி உண்டு. அதிக பட்சமாக 1000 பேர்வரை குழுவில் இணைந்திடலாம். 1.5 ஜிபி வரையிலான கோப்புகளை பகிரலாம். வாட்சப் செயலியுடன் ஒப்பிடும்பொழுது “டெலிகிராம்” சிறந்த ஆப் தான்.

கூகிள் அல்லோ (Google Allo)

கூகிள் அப்பல்லோ ன்னு தப்பா படிச்சிடாதீங்க. “கூகிள் அல்லோ”. கூகிள் அளித்திருக்கும் பல அம்சங்களை கூகிள் அலோவில் பயன்படுத்தலாம். வாட்சப்பிற்கு சரியான போட்டியாக இருக்கும் என நம்ப படுகிறது.

வாட்சப் வீடியோ கால் (Whatsapp Video Call)

மற்ற செயலிகளுக்கு நிகராக, போட்டியாக இருக்க வேண்டும் வாட்சப் அடிக்கடி வசதிகளை பெருக்கி கொண்டு வரும் தந்திரத்தில் இது ஒன்று. வாட்சப் வீடியோ கால் வசதி. இன்னும் பழைய வாட்சப் பதிப்பை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வசதி வந்திருக்காது. புதிய வாட்சப் – அப்டேட் செய்தால் வீடியோ கால் வசதி பெற முடியும்.

யாருமே படிக்க முடியாத வாட்சப் தகவல்

வாட்சப்பில் அனுப்பபடும் தகவல் பெறுநரைத் தவிர வேறு யாருமே பயன்படுத்த முடியாத தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன்படி, ஒரு தகவலை அனுப்புவர் மற்றுப் பெறுபவரை தவிர, வேறு யாராலும் அதை படிக்க முடியாது. ஈவன் வாட்சப் நிறுவனம் கூட அந்த தகவலை மீண்டும் பார்க்க முடியாது. இந்த வசதியால் பயனர் தகவல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags: whatsapp news, whatsapp tricks tamil, Tamil whatsapp tips, Tamil secret whatsapp, Whatsapp Status in Tamil, Video call Whatsapp, New Features in Whatsapp.

By admin

One thought on “ஏன்ட்ராய்டு – வாட்சப் – ரகசியங்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *