செல், செல்லுலர், செல்லுலார் போன், சிபி (Cell, Cellular, Cellular Phone, CP) என அழைக்கப்படும் மொபைல்(Mobile) அல்லது போர்டபிள் போன்  (Portable Phone) எப்படி உருவானது? அதில் என்னென்ன வசதிகள் இருந்தன? எப்படி பயன்படுகிறது என்பதை பற்றி அறிந்துகொள்வோம். இது உலகத்தில் எவர் ஒருவருடனும், எங்கிருந்தும் பேச பயன்படக்கூடிய கருவி செல்போன். மோட்டோரோலாவின் டெவலப்பர் டீமின் மார்டின் கூப்பர் (Dr. Martin Cooper.) தனது குழுவினருடன் இணைந்து இதனை கண்டுபிடித்தார்.

Evolution of the Mobile Phone

முதல் கண்டுபிடிக்கப்பட்ட செல்போன் 2.4 பவுண்ட் எடையும், 9 அங்குல நீளமும் கொண்டிருந்தது. முதன் முதலில் செல்போன் அழைப்பு மேற்கொண்டவரும் டாக்டர் கூப்பர்தான். ஆண்டு  1973. ஏப்ரல் 3.

cellular phone nokia

பிரிக் போன் (செங்கல் போன்) என்றழைக்கப்பட்ட இந்த போனிலிருந்து, தற்பொழுது பல்வேறு நிலைகளை கடந்து முற்றிலும் வித்தியாசமான புதிய வெயிட்லெஸ் போன்கள்,  LED திரைகள் என வந்துவிட்டன.

செல்போன் திறன்கள்

ஸ்மார்ட்போன்கள் என அழைக்கப்படும் இந்த போன்கள் மூலம், கம்ப்யூட்டரில் செய்யக்கூடிய பிரௌசிங், கணக்கீடு செய்தல், தகவல் பரிமாறல் என பெரும்பாலான வேலைகளை செய்ய முடிகிறது.

ஸ்மார்ட்போன்கள் என்னென்ன செய்கிறது?

1.எந்த ஒரு நபருக்கும் போன்கால் செய்ய, அட்டன் செய்ய போன் முடியும்..
2. டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்பவும், பெறவும் முடியும்.
3. போனில் இணைக்கப்பட்ட கேமிரா வழியாக போட்டோ எடுக்கவும், வீடியோ எடுக்கவும் முடியும்.
4. ஆப்ஸ் டவுன்லோட் செய்யவும், இமெயில், சாட் என இன்டர்நெட் அக்சஸ் செய்யவும் முடியும்.
5. காலாண்டர், கான்டாக்ட்ஸ், கிளாக் போன்ற பொதுவான புரோகிராம்களை அணுகவும், கேம்ஸ் விளையாடவும் முடியும்.
6. ப்ளூடூத், இன்டர்நெட் உடன் இணைக்கப்பட்ட டிவைஸ்களை ரிமோட் கன்ட்ரோல் செய்ய முடியும்.
7. படங்கள் பார்க்கவும், பாட்டு கேட்கவும் முடியும்.

தொடர்புடைய தகவல்கள்:

செல்போன் வாங்க – குறிப்புகள்
செல்போன் குயிக் சார்ஜிங் டிப்ஸ்
தண்ணீரில் விழுந்த செல்போனை சரி செய்வது எப்படி?

Tags: Cellphone, Cellular, Cell Phone, Brick Phone, Cp, Mobile, Mobile Phone, portable cell phone.

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *