android app for tn school students

அதிக மதிப்பெண்கள் பெற மாணவர்களை படி படி என்று சொல்லி டார்ச்சர் செய்யும் ஆசிரியர், பெற்றோர்கள் அதிகம். இதனால் மாணவர்களுக்கு, ஒரு கட்டத்திற்கு மேல் படிப்பின் மீது ஒரு வெறுப்பே உண்டாகிவிடும். படிக்கும் படிப்பை அவர்களாகவே ஆர்வத்துடன் கற்றுக்கொள்வதற்கான இன்ராக்டிவ் கல்வி முறையை பின்பற்றினால், பிள்ளைகளை  இதுபோன்று தொந்தரவு செய்யத்தேவையில்லை.  அவர்களாகவே படித்து – கற்றுக்கொள்வார்கள். புரிதல் மேம்படும். படிப்பவை மனதில் நிற்கும்.

அந்த வகையில் பள்ளிக் கல்வித்துறையின் தகவல் மற்றும் தொடர்பு பிரிவு ஒரு ஆண்ட்ராய்ட் ஆப் வெளியிட்டுள்ளது. பப்ளிக் பரீட்சை எழுதும் பத்து, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்பொழுது ஸ்ட்ரெஸ் அதிகமாக இருக்கும். முழு ஆண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் அவர்களை அந்த நிலைக்கு ஆளாக்குகிறது.

என்னதான் படிக்கும் பாடங்களை மனப்பாடம் செய்து வந்தாலும், அதைப் புரிந்து படித்தால்தான் மனதில் நிற்கும். எந்நிலையிலும் அதை வெளிப்படுத்த உதவும். இதனை ஊக்குவிக்க தகவல் அடையாள தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ஆப். கேமிராவை பயன்படுத்தி புத்தகத்தை ஸ்கேன் செய்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தில் உள்ள தகவல்களை உள்வாங்கி, அதற்கு தகுந்த 3D/2D படம் உடனே ஆப்பில் காண்பிக்கப்படும். தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இது மிக பயனுள்ளதாக இருக்கும். ஏறக்குறைய 141 பாடங்களுக்கு இந்த ஆப்பில் 3D படங்களை பார்க்க முடியும்.

டிஎன்ஸ்கூல் லைவ் ஆப்பை எப்படி பயன்படுத்துவது? 

  • ஆன்ட்ராய்த் ப்ளே ஸ்டோரில் TNSCHOOLS LIVE என்று சர்ச் செய்து தேடி / கீழுள்ள டவுன்லோட் லிங்க் கிளிக் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
  • ஆப்பை ஓப்பன் செய்ததும் பத்தாம் வகுப்பா அல்லது பனிரெண்டாம் வகுப்பா என தேர்வு செய்து, புத்தகத்திற்கு நேராக கேமிராவை காண்பிக்க வேண்டும்.
  • ஆப்பானது புத்தகத்தில் இருக்கும் தகவல்களை உணர்ந்து அதற்கேற்ற 3D புகைப்படங்களை காண்பிக்கும். 

கண்டிப்பாக TN School Live app சிறந்த பயனுள்ள ஆன்ட்ராய்ட் ஆப் என்பதில் சந்தேகமில்லை. முடிந்தவரை இத்தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்.

Tags: Tnschool live app, app for 10,12 students, study app for 10 students, tnschool live app for +2 students. 

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *