நீங்கள் எங்கு சென்றாலும், அங்கிருந்தாவாறே உங்களது போட்டோ, வீடியோக்களை அணுக ஒரு நல்ல வழி இருக்கிறது. அது உங்களது ஆன்ட்ராய்ட் டிவைசை கூகிள் போட்டோஸ் ஏப் உடன் சிங்க் – sync செய்வது.

google photos app free storage

அப்படி செய்வதன் மூலம் நீங்கள் அன்லிமிடெட் ஸ்டோரேஜை பெற முடியும். மேலும் லைஃப் லாங் உங்களுடைய போட்டோக்கள் அழியாமல் இருக்கும். ஒவ்வொரு முறையும் நீங்கள் போனில் எடுக்கும் போட்டோ, வீடியோ அனைத்தும் கூகிள் போட்டோசில் சேமிக்கப்படும். இந்த செட்டிங்ஸ் செய்ய,

  • Google Photos app – ஐ திறந்துகொள்ளுங்கள்
  • அதில்  ≡ மெனு கிளிக் செய்து, Settings – ஐ டேப் செய்யுங்கள். 
  • அதில் Backup & sync என்பதை தேர்ந்தெடுக்கவும். அவ்வளவுதான். 

இனி உங்கள் போன் கேமரா மூலம் எடுக்கப்படும் போட்டோஸ், வீடியோஸ் அனைத்தும் கூகிள் போட்டோவில் சேமித்து வைக்கப்படும்.

பனோரமா போட்டோ எடுப்பது எப்படி?

1. கூகிள் போட்டோஸ் ஆப்பை ஓப்பன் செய்யவும். 3.0 அல்லது அதற்கு மேல் உள்ள வர்சனில் Backup & sync மெனு டச் செய்து Panorama என்பதை டேப் செய்யவும். அதற்கு கீழ் உள்ள வர்சனில் வலதுபுறம் ஸ்வைப் செய்து, Panorama என்பதை தேர்ந்தெடுக்கவும்.

2. திரையில் சாம்பல் நிற புள்ளி நீல நிறமாக மாறும்வரை படம் எடுக்கப்பட வேண்டிய பகுதியை நோக்கி மெதுவாக நகர்த்தவும். முடிந்தவுடன் ஸ்கிரீனீல் வலது கீழ் மூலையில் உள்ள டிக்மார்க்-ஐ டச் செய்யவும். அவ்வளவுதான் உங்களது பனோரமா போட்டோ கூகிள் ஆப்சில் சேமிக்கப்பட்டுவிடும்.

photos backup for computer

வேகமாக போட்டோ சர்ச் செய்ய

எடுத்த போட்டோக்களை வேகமா சர்ச் செய்ய ப்ளூ சர்ச் பாக்சை டேப் செய்து, அதில் போட்டோ பெயர், இடம், activity or object கொடுத்து தேடலாம்.

அனிமேட் போட்டோ கிரியேட் செய்ய: 

உங்கள் நினைவுகளை பிரகாசிக்கச் செய்யும் போட்டோக்களை நீங்கள் அனிமேட் செய்யலாம். அவ்வாறு செய்ய,

  • கூகிள் போட்டோஸ் ஆப் ஓப்பன் செய்யவும்.
  • வலது மேல் மூலையில் உள்ள மெனுவை  ≡  தேர்ந்தெடுத்து, Assistant என்பதை டச் செய்யவும்.
  • 1.2 வர்சன் அல்லது அதற்கு குறைவான பதிப்பு எனில் வலது மேல் முலையில் உள்ள  + சைனை டேப் செய்து Animation என்பதை டச் செய்யவும்.
  • இப்பொழுது 2 லிருந்து 50 போட்டோக்கள் வரை செலக்ட் செய்து கிரியேட் என்பதை டச் செய்யவும். உங்களது அனிமேசன் ஆட்டோமேட்டிக்கா ப்ளே ஆகும். அதே சமயத்தில் கூகிள் போட்டோஸ் -லும் சேமிக்கப்படும். 
கூகிள் போட்டோஸ் ஆப் டவுன்லோட் செய்ய சுட்டி:
Tags: Google Photos App, Google Photos android app, Google Photos for computer, Google Photos iPhone app, Google Photos iPad app.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *