நெட்டும் ஸ்பீடா இருக்கணும். அதே சமயம் டேட்டாவும் குறைவா யூஸ் பண்ண மாதிரி இருக்கணும். நெட் பேலன்ஸ் குறையாம அப்படியே இருக்கணும். நெட் பில்லும் அதிகம் வரக்கூடாது. அதுக்கு என்ன செய்றது? நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் இணையதளங்கள் வேகமாக திறக்க பிரௌசர் கேட்சியை நீக்காமல் இருக்க வேண்டும். இதை செய்தாலே மேற்கண்ட கேள்விகளுக்கு விடையும் கிடைக்கும்.

பிரௌசர் கேட்சி மெமரி என்றால் என்ன?

இது ஒரு இணையதளத்தின் படங்கள், லோகோ மற்றும் சில கோப்புகள் பிரௌசரால் தற்காலிகமாக தரவிறக்கி வைக்கப்படுகிறது. இதற்கு பெயர்தான் பிரௌசர் கேட்சி. அல்லது டெம்ப்ர ரி இன்டர்நெட் ஃபைல்ஸ்.

low cost speed internet

முதன் முதலில் உங்கள் பிரௌசரில் ஒரு புதிய வெப்சைட்டை திறக்கும்பொழுது அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

அதற்கு காரணம் இதுபோன்ற பைல்கள் அனைத்தும் உலவியின் மூலம் Download ஆவதுதான்.

அதன் பிறகு இரண்டாவது முறை அதே பக்கத்தை திறக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளாது. ஏனென்றால் ஏற்கனவே தரவிறக்கப்பட்ட படங்கள், கோப்புகள் இணைய உலவியின் தற்காலிக சேமிப்பில் இருக்கும். அதனால் இரண்டாவது, மூன்றாவது முறை அந்த இணையப் பக்கத்தினை திறக்கும்பொழுது விரைவாக திறக்கிறது.

கேட்சி பைல் அவசியமா?

ஆம். அடிக்கடி நீங்கள் விசிட் செய்யும் இணையதளங்கள் விரைவாக திறந்திட அவைகள் உதவும். எனவே நீங்கள் சிஸ்டம் கிளீனர் மென்பொருள்களை பயன்படுத்தும்பொழுது browser cache மட்டும் டெலீட் செய்யாமல் இருப்பதற்கான செட்டிங்சை அமைத்திட வேண்டும்.

இதனால் என்ன நன்மை?

1. இணைய பயன்பாட்டின் வீதம் குறைகிறது. காரணம் அந்த இணையபக்கங்களுக்கு தேவையான படங்கள், கோப்புகள் ஏற்கனவே பிரௌசரில் இருப்பதால், அவற்றை புதியதாக பிரௌசர் தரவிறக்கத் தேவையில்லை.
2.  ஏற்கனவே தேவையான பைல்கள் நம்மிடம் இருப்பதால் வேகமாக இணைய பக்கங்கள் திறக்கும்.

எப்படி செய்வது?

நீங்கள் Ccleaner மென்பொருள் உபயோகித்தால் அது அனைத்து தேவையில்லாத டெம்ப் பைல்களை அழித்துவிடும். அதில் application என்ற டேபை கிளிக் செய்து, நீங்கள் பயன்படுத்தும் பிரசௌர் அப்ளிகேஷன் காட்டப்படும். அதிலுள்ள internet catche என்பதில் உள்ள டிக் மார்க்கை எடுத்து விட வேண்டும். இனி ஒவ்வொருமுறையும் சி கிளீனர் பயன்படுத்தி தேவையில்லாத பைல்களை அழிக்கும்பொழுது, பிரௌசர் கேட்சி அழிக்கபடாமல் நிலையாக இருக்கும்.

don't remove cache file in ccleaner

மற்ற சிஸ்டம் அட்லிட்டி மென்பொருளிலும் இதுபோன்ற ஆப்சன் இருக்கும். அதில் செட்டிங்ஸ் சென்று பிரௌசர் கேட்சி என்பதில் உள்ள டிக் மார்க்கை எடுத்துவிட வேண்டும்.

பிரௌசரில் கேட்சி அழியாமல் இருக்க என்ன செய்வது?

குரோம் பிரௌசர் செட்டிங்ஸ்:

1.வலது மேல் மூலையில் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து செட்டிங்ஸ் சென்று, Advanced Settings கிளிக் செய்யவும்.
2. அதில் Clear Browsing Data என்பதனை கிளிக் செய்யவும்.
3. இப்போது தோன்றும் விண்டோவில் Chache Images and Files என்பதில் உள்ள டிக்மார்க்கை எடுத்து விடவும்.

don't remove cache file in chrome

ஃபயர்பாக்ஸ் செட்டிங்ஸ் :

1. வலது மேல் மூலையில் உள்ள மூன்று கோடுகளை கிளிக் செய்து, ஆப்சன் கிளிக் செய்யவும்.
2. அதில் Privacy என்பதினை கிளிக் செய்யவும்.
3. அதன் கீழாக உள்ள Clear recent History என்பதினை கிளிக் செய்யவும்.
4. தோன்று விண்டோவில் Cache என்பதில் உள்ள டிக் மார்க்கை எடுத்துவிடவும்.

don't remove cache file in firefox

அவ்வளவுதான். நீங்களாகவே பிரௌசர் History டெலீட் செய்யும்போது இப்படி செட்டிங்ஸ் மாற்றி விட்டு செய்தால் Cache Files அழியாது.

இந்த செட்டிங்சை செய்துவிட்டால், நீங்கள் அடிக்கடி திறக்கும் இணைய பக்கம் விரைவாக திறக்கும். உங்களுக்கு டேட்டா செலவும் மிச்சமாகும்.

பதிவு பிடித்திருந்தால், FB, Twitter, Google Plus ல் ஷேர் செய்ய மறக்க வேண்டாம். பதிவு பற்றிய சந்தேகங்களுக்கு மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.

Tittle:  Internet browsing tips and tricks to reduce data and charge.
Tags: Cache Settings, Reduce internet data, Browser Cache, Net bill reduce, internet tips, computer tips, net using trick, speed net low cost.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *