நமக்கு கிடைத்திருக்கிற மிகப் பெரிய வரபிரசாதம் ஆன்ட்ராய்ட் போன். அதிகமான வேலைகளை மிக ஸ்மார்ட்டாக செய்து கொடுக்கிறது. பேசுவது, வீடியோ எடுப்பது, போட்டோ எடுப்பது, கேம் விளையாடுவது, நெட் பயன்படுத்துவது என பலவிதமான செயல்பாடுகளுக்கு மிக விரைவாக இயங்கி செயல்படுவதால் அதிகம் பேர் விரும்புகின்றனர்.

video editing in android phone

எங்காவது சுற்றுலா செல்லும்போதும், உறவினர்களின் விஷேசங்களில் கலந்துகொள்ளும்போதும், அங்கு பார்க்கும் – நடைபெறும் நிகழ்வுகளை – நிகழ்ச்சிகளை வீடியோ எடுப்பது வழக்கம். அது நீண்டதாக – பெரிய வீடியோவாக இருப்பின், நண்பர்களுக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்படும். அது மட்டுமில்லாமல் அதிக டேட்டாவும் செலவாகும். வீடியோவில் உள்ள குறிப்பிட்ட முக்கியமான பகுதியை மட்டும் அனுப்பினால் அதுபோன்ற சிரமங்கள் எதுவும் இருக்காது. டேட்டா செலவும் மிச்சம்.

எப்படி வீடியோவை எடிட் செய்வது?

  • அதற்கு ஆன்ட்ராய்ட் போனிலேயே வீடியோ எடிட்டர் வசதி உள்ளது. வீடியோ ப்ளே செய்யும்போது, அதற்கு கீழே பென்சில் போன்ற ஐகான் இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களுக்கு அந்த வீடியோவானது ஃபிரேம் பை பிரேமாக கிடைக்கும். 
  • அதில் உள்ள எட்ஜ் (இருபுறமும் இருக்கும்) எந்த இடத்திலிருந்து எந்த இடம் வரை உங்களுக்கு வீடியோ தேவையோ அதுவரைக்கும் டிராக் செய்து ட்ரிம் செய்து விடுங்கள். 
  • இப்போது டிரிம் செய்யப்பட்ட வீடியோவை சேமித்துக்கொள்ளலாம். சேமித்து வைக்கப்பட்ட வீடியோ எளிதாக நண்பர்களுக்கு வாட்சப், பேஸ்புக் இன்ன பிற தகவல் தொடர்பு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ளலாம்.

நிறைய பேருக்கு இந்த வசதியை பயன்படுத்த தெரியாததால் முழு வீடியோவையும் அப்படியே அனுப்பி விடுகிறார்கள். இதனால் டேட்டா மற்றும் வீடியோ அப்லோட் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இனி அதுபோல முழுமையான வீடியோவை அனுப்பாமல், முக்கியமான குறிப்பிட்ட பகுதியை மட்டும் ட்ரிம் செய்து சிறிய வீடியோவாக மாற்றி அனுப்புங்கள். அனுப்புவதும் சுலபம். வீடியோவும் பார்க்க ஷார்ட்டாகவும் இருக்கும்.

இந்த பதிவு குறித்த கமெண்ட்களை இங்கு பதியவும். பிடித்திருந்தால் பேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளசில் ஷேர் செய்ய மறக்க வேண்டாம்.

மேலும் ஆன்ட்ராய்ட் போனில் மிக எளிதாக வீடியோ எடிட் செய்வது எப்படி என்பது குறித்த புதிய தகவல்கள் உங்களிடம் இருந்தால் இங்கு தெரியபடுத்தவும். மற்றவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும்.

Tags: video editing in android phone, simple video trimming, video editing in smartphone, Trim video in Android phone without software.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *