ஜிமெயில் புதிய வசதி – டவுன்லோட் செய்யாமல் வீடியோ பார்க்கலாம்.

ஜிமெயில் அவ்வப்பொழுது புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஜிமெயிலில் இணைக்கப்படும் வீடியோக்களை டவுன்லோட் செய்யாமல் அப்படியே பார்க்கும் வசதி வரவுள்ளது.

video play option on gmail

என்னதான் வாட்சப், ட்விட்டர், இன்ஸ்டா கிராம் என இளைஞர்கள் பயன்படுத்தினாலும், வேலை, அலுவல் சார்ந்த விடயங்களுக்கு வீட்டு முகவரியுடன், ஒரு இணைய முகவரியும் தேவைப்படுகிறது. பெரும்பாலான இளைஞர்கள் இணைய முகவரியாக தேர்ந்தெடுப்பது ஜிமெயில்தான். அதில் டெக்ஸ்ட் ஆவணங்களை இணைத்து அனுப்பலாம், படங்களை இணைக்கலாம். வீடியோக்களை இணைத்து அனுப்பலாம்.

அப்படி இணைக்கப்பட்ட வீடியோக்களை டவுன்லோட் செய்துதான் பார்க்க முடியும். தற்பொழுது டவுன்லோட் செய்யாமல் பார்க்க கூடிய வசதி வரவுள்ளது. இதனால் டேட்டா மிச்சமாவதோடு, உடனடியாக வீடியோவில் என்ன உள்ளது என்பதையும் பார்த்துவிட முடியும். அப்படி அனுப்பும் வீடியோவானது 25MB க்குள் இருக்க வேண்டும் என்பது கட்டுப்பாடு. அந்தளவிற்குள் அடங்கும் வீடியோக்களை மட்டுமே இப்படி பார்க்க முடியும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *