வாட்சப் என்றால் என்ன?

வாட்சப் என்பது ஒரு செய்தி பரிமாற்றச் செயலி ஆகும். இதைத் தமிழில் கட்செவி அஞ்சல் அல்லது புலனம் என குறிப்பிடுகின்றனர். இது நுண்ணறி அலைபேசி எனப்படும் ஸ்மார்ட்போன்களில் இயங்க கூடியது.

details of whatsapp

வாட்சப் உருவாக்குனர்கள்:

யாஹூ நிறுவனத்தில் பணியாற்றிய பிரையன் ஆக்டன், ஜேன் கோம் என்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான் வாட்சப் நிறுவனம். இச்செயலி உருவாக்கப்பட்டபோது  55 பணியாளர்கள் மட்டுமே இருந்தனர்.

வாட்சப் பயன்பாடு

இச்செயலி நிகழ்நேரத்தில் (Online) இணையத்தின் உதவியுடன் செய்திகளை தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்து கொள்ள உதவுகிறது.

இதன் மூலம் எழுத்துக்களான உரை செய்திகள் (Text Message), படம் (Picture), நிகழ்படம் (video), ஒலிக்கோப்புகள் (Audio File) மற்றும் பயனரின் இருப்பிடத்தைப் பகிர்ந்துகொள்ளலாம்.

வாட்சப் சப்போர்ட் செய்யும் போன்கள்

வாட்சப் செயலி ஆன்ட்ராய்டு , ஆப்பிள், விண்டோஸ், நோக்கியா சிம்பியன், பிளாக்பெரி போன்ற அலைபேசி இயங்குதளங்களில் இயங்கும்.

புதிய வசதிகள்

நாளுக்கு நாள் தேவைகள் பெருகிவருதை முன்னிட்டு, புத்தம் புது வசதிகள் இச்செயலியில் புகுத்தப்பட்டு வருகிறது. வாட்சப் புதிய வசதிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்.

வாட்சப் டூ பேஸ்புக்

வாட்சப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியுள்ளது. இது வாட்சப் பயன்படுத்தும்  பலருக்கும் தெரியாத விஷயம்.

தொடர்புடைய பதிவுகள்

வாட்சப் பாதுகாப்பு அம்சங்கள்
வாட்சப் நல்லதா கெட்டதா?
இன்டர்நெட் இல்லாமல் வாட்சப்

Tags: Tamil Whatsapp, Whatsapp tips in Tamil, What is Whatsapp, Details about Whatsapp.

By admin

One thought on “வாட்சப் பயன்படுத்துவது எப்படி ? [Whatsapp Guide]”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *