பாஸ்வேர்ட் யூஸ் பண்ணினா, தப்பா டைப் பண்ணினால் பிரச்னை வரும்னுட்டு பேட்டர்ன் லாக் கொண்டு வந்தாங்க.. இது ரொம்ப ஈசியாவும், அதேசமயம் பாதுகாப்பாகவும் இருக்கும்னு நினைச்சிட்டு இருக்கோம். பேட்டர்ன் லாக்ல பாதுகாப்பு அம்சத்தை கேலி கூத்தாக்கிடறாங்களாம். ஆமாங்க ரொம்ப நாளே ஒரே மாதிரியான Pattern Lock யூஸ் பன்றதெல்லாம் வேஸ்ட்டாம். எப்படியெல்லாம் பேட்டர்ன் லாக் சிஸ்டத்துல பிரச்னை வருது?, அதுக்கு என்ன மாற்று பாதுகாப்பு ஏற்பாடு இருக்குன்னு தெரிஞ்சுக்குவோம் வாங்க..!

pattern lock tamil guide
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரது மொபைலிலின் பாஸ்வேர்டு, எண்களாக இருக்காது. பேட்டர்ன் லாக்-ஆகத்தான் இருக்கும். ஒவ்வொரு முறையும் எண்களை டைப் செய்வது, அவசரத்தில் தப்பாக டைப் செய்து முழிப்பது போன்ற சிக்கல்கள் எல்லாம் வராமல் தடுப்பது இந்த பேட்டர்ன்லாக்தான். சின்னதொரு ஸ்வைப்பில் லாக்கை எடுத்து விடலாம். 
போனும் பாதுகாப்பாக இருக்கும். இந்த முறை மிக எளிதானதும், பாதுகாப்பானதும் கூட என்றுதான் நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆண்ட்ராய்டு போன்களில் இந்த பேட்டர்ன் லாக் முறை நாம் நினைக்கும் அளவுக்கு எல்லாம் பாதுகாப்பானது இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 
உங்கள் மொபைலில் பேட்டர்னை கொஞ்சம் கூட யோசிக்காமல், அசால்ட்டாக போட்டு அன்லாக் செய்துவிடும், புத்திசாலி நண்பர்களை கொண்டவர்களுக்கு இந்த விஷயம் ஏற்கெனவே தெரிந்திருக்கும்.
ஆண்ட்ராய்டு போன்களில் பெரும்பாலான பாஸ்வேர்டு பேட்டர்ன்களை வெறும் 5 தடவைகளுக்குள் கண்டுபிடித்துவிட முடியுமாம். இதுகுறித்து ஆய்வு செய்த சீனா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர். நீங்கள் அன்லாக் செய்யும் போது, அதனை தூரத்தில் இருந்து வீடியோ எடுப்பதன் மூலமாகவோ, அல்லது கம்ப்யூட்டர் விஷன் அல்காரிதம் மென்பொருட்களைக் கொண்டோ உங்கள் ஆண்ட்ராய்டு டிவைஸ்களின் பேட்டர்ன் லாக்கை கண்டுபிடித்துவிட முடியும் என்கின்றனர் இவர்கள்.
அதுவும் நீங்கள் கடினமான பேட்டர்ன்கள் என நினைக்கும் பேட்டர்ன்களை இந்த முறையின் மூலமாக இன்னும் விரைவில் கண்டுபிடித்துவிட முடியும். அதுவும் நிதி சேவைகள் தொடர்பான வங்கி சேவைகள், தனிப்பட்ட தகவல்களை கொண்ட ஆப்ஸ்களை பயன்படுத்துபவர்கள் தங்களது டிவைஸ்களை பாதுகாக்க இந்த பேட்டர்ன் லாக் முறையினையே பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, இது நீங்கள் நினைக்கும் அளவிற்கு பாதுகாப்பானது இல்லை என்பது தெரிகின்றது.
இந்த ஆய்வு முடிவுகளை கூட விட்டுவிடலாம். காரணம், இதில் கணினி உதவியுடன் கூடிய அல்காரிதம்கள், கேமராக்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவை எதுவும் இல்லாமலே, நிஜ வாழ்க்கையில் சிலர் உங்கள் போன் பேட்டர்ன்களை, உங்கள் கண் முன்னரே அன்லாக் செய்திருப்பார்கள்.
மொபைல் லாக்
1. நீங்கள் நீண்ட நாட்கள் ஒரே பேட்டர்னையே பயன்படுத்துபவர் என்றால், பாதுகாப்பு குறித்தெல்லாம் ஆசையே இருக்கக் கூடாது. காரணம், உங்கள் வீடு, அலுவலகம், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் உங்களை சுற்றியிருக்கும் நபர்களுக்கு உங்கள் பேட்டர்ன் நன்றாகவே தெரிந்திருக்கும். இவர்களால் எளிதில் உங்கள் போன் பேட்டர்னை அன்லாக் செய்ய முடியும். எனவே அடிக்கடி பேட்டர்ன்களை மாற்றுவது நலம். இது ரொம்ப கஷ்டமான வேலை எல்லாம் இல்லையே பாஸ்?
2. நீங்கள் அடிக்கடி போனை எடுத்து, பேட்டர்ன் போட்டு அன்லாக் செய்துவிட்டு, எதற்கு போனை எடுத்தோம் என்பதையே மறந்துவிட்டு வெறுமனே டைம் மட்டும் பார்த்துவிட்டு,  மீண்டும் லாக் செய்யும் நபர் என்றால், உங்கள் பேட்டர்னை இன்னும் சுலபமாக கண்டுபிடித்து விடலாம். 
நீங்கள் போனை அன்லாக் செய்த விரல் தடம், உங்கள் போன் டிஸ்ப்ளேயில் அழகாக பதிந்திருக்கும். அதன் பின்பு லாக் செய்யும் போது, பவர் பட்டனைத் தான் பயன்படுத்தியிருப்பீர்கள். எனவே அதைவைத்தும் கூட எளிதாக பேட்டர்னை யூகித்துவிடலாம். அட இப்படி சி.ஐ.டி வேலை எல்லாம் செஞ்சு அன்லாக் செய்யும் அளவுக்கு…நம்ம போன் அவ்ளோ வொர்த்தா பாஸ்?…என நீங்கள் யோசித்தால், அப்புறம் எதுக்கு ப்ரோ அந்த லாக்கு?
3. வேற என்ன பண்ணலாம்? 
நிச்சயமாக உங்கள் போனில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் முக்கியமானதுதான். எனவே அதற்கு பாதுகாப்பும் நிச்சயம் தேவை. எனவே உங்கள் போனில் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் போல, பயோமெட்ரிக் பாதுகாப்பு அம்சங்கள் இருந்தால் அதைப் பயன்படுத்துவதே சிறப்பு. அல்லது பாஸ்வேர்டு அல்லது பின் நம்பர் ஆப்ஷனை பயன்படுத்துவதும், பாதுகாப்புக்கு ஏற்றது. பாஸ்வேர்டு வைக்கும்போது, எப்படி சில தவறுகளை எல்லாம் செய்யவே கூடாதோ, அதுபோலவே பேட்டர்ன்லாக் விஷயத்திலும் கவனம் தேவை ட்யூட்ஸ்!
நிச்சயமா இந்த பதிவுல இருக்கிற விஷயங்கள் உங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்னு நம்பறேன். 
Tags: Pattern Lock, Password, Finger Print, Sensor, Lock Password, Smartphone Password. Computer, Algorithm, Laptop. 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *