இன்றைக்கு கம்ப்யூடர் பயன்படுத்தாதவர்களே இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் கம்ப்யூட்டர், லேப்டாப் கண்டிப்பாக இருக்கும். கம்ப்யூட்டரை பயன்படுத்தும்பொழுது சில அடிப்படை விஷயங்களை பின்பற்ற வேண்டும்.

நிறைய பேருக்கு அந்த பழக்கமே வருவதில்லை. அதனால் கம்ப்யூட்டர் பிரச்னைக்கு சீக்கிரமே ஆளாகிவிடுகிறது. சரி, பிரச்னை வராமல் கம்ப்யூட்டர் ஆப்ரேட் செய்ய என்ன செய்யலாம்? தொடர்ந்து படியுங்க தெரிஞ்சுக்கலாம்.

computer paramarippu

ரீஸ்டார்ட் செய்யுங்கள்:

தொடர்ந்து கம்ப்யூட்டர் இயங்கும்பொழுது ஒரு வித தேக்கம் உருவாகும். கம்ப்யூட்டரும் நம்மைப் போலதான். மூளைக்கு அதிக வேலை கொடுத்தால்,  சோர்ந்துபோவது போல.. கம்ப்யூட்டரும் சோர்வடையும். கம்ப்யூட்டர் திடீரென ஹேங் ஆகி நின்றுவிடும். இதுபோன்ற நிகழ்வுகளால் அதனால் சேமிக்கப்பட்ட டேட்டாக்கள் சேதமடையும் வாய்ப்பு ஏற்படும். எனவே அவ்வப்பொழுது கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திட வேண்டும்.

பேக்கப் அவசியம்:

இன்னும் கூட நிறைய பேர் இப்படிதான் நினைத்துக்கொண்டுள்ளனர். ‘நம்ம கம்ப்யூட்டர்தானே… சேமிக்கப்பட்ட பைல்கள் எங்கே போய்ட போகுது” என்று அசாதாரணமாக இருந்துவிடுகின்றனர். உண்மையில் என்னவென்றால் எந்த ஒரு மெஷினையும் மனிதன் நம்பவே கூடாது. அது திடீரென நட்டாற்றில் விட்டது போல செய்துவிடும். என்ன செய்தும் மீண்டும் இழந்த டேட்டாக்களை பெற முடியாது. அதனால் மூன்று மாத த்திற்கு ஒரு முறையாவது கம்ப்யூட்டரில் அதி முக்கியமான கோப்புகளை க்டிப்பா “பேக்கப்” எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கம்ப்யூட்டர் முன்பு சாப்பிடுவது:

வீடுதானே…. யார் பார்க்க போகிறார்கள் என்று கம்ப்யூட்டர் இருக்கையில் அமர்ந்தவாறே உணவு உண்ணுவது, காபி குடிப்பது போன்ற செயல்கள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை. ஏனென்றால் உணவுப் பொருட்கள்  கீபோர்ட், மௌஸ்  போன்றவற்றில் கொட்டி, அது பயன்படுத்த முடியாத நிலைமைக்கு போய்விடும்.

ரெஸ்ட் தேவை:

உங்களுக்கு மட்டுமல்ல.. கம்ப்யூட்டருக்கும் சீரான இடைவெளியில் சிறிது ஓய்வு தேவை. ஓய்வு எடுப்பது நல்லது. இதனால் கம்ப்யூட்டர் வெப்பம் குறைந்து சீரான நிலைக்கு சென்று திரும்பும். உடம்பிலும் இரத்த ஓட்டம் சீராக அனைத்து பாகங்களுக்கு சென்று வருவதால் உங்களுக்கும் புத்துணர்ச்சி ஏற்படும். அதுபோலதான் கம்ப்யூட்டருக்கும் ரெஸ்ட் தேவை.

ஒரே நேரத்தில் பல வேலைகள்:

கம்ப்யூட்டரில் ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்யலாம். ஆனால் அவ்வாறு தேவைப்பட்டால் மட்டுமே செய்ய வேண்டும். தேவையில்லாத நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புரோகிராம்களை மூடிவிட வேண்டும். தொடர்ந்து பல புரோகிராம்களை ஓப்பன் செய்து, அதில் வேலை செய்யாமல் வெறுமனே இருந்தால் கம்ப்யூட்டருக்கு வேலை பளு அதிகமாகும். வெகு விரைவில் அது நடையை சாத்திக்கொள்ளும்.

கம்ப்யூட்டர் விற்கும்போது செய்ய வேண்டியவை:

பழைய கம்ப்யூட்டர் ஆகிவிட்டது. அதனால் அதை விற்றுவிட்டுபுது கம்ப்யூட்டர் வாங்கலாம் என்று நிலையில் இதை கட்டாயம் செய்தே ஆக வேண்டும். பழைய கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை மறக்காமல் அழித்துவிட வேண்டும். இல்லையென்றால் அதை வாங்குபவர்கள் அந்த தகவல்களை வைத்துக்கொண்டு, ஏதாவது பிராடு செய்ய வாய்ப்பிருக்கிறது.

தூசி துப்பு துடைப்பது அவசியம்:

வாரத்திற்கு ஒரு முறையாவது கம்ப்யூட்டர் கீபோர்ட், மௌஸ், கேபின் மீது படிந்திருக்கும் தூசிகளை அகற்ற வேண்டும். சுத்தமாக வைத்திருந்தால், அதிக தூசிகள் கம்ப்யூட்டருக்குள் செல்லாமல் தடுத்து, அது ரிப்பேர் ஆவதிலிருந்து தடுக்கலாம்.

தொடர்புள்ள இடுகை: ஒட்டுமொத்தமாக பைல்களுக்கு ரீநேம் செய்வது எப்படி? 

By admin

2 thoughts on “கம்ப்யூட்டர் மெயின்டெனன்ஸ் டிப்ஸ் [Computer maintenance Tips]”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *