இப்பொழுதெல்லாம் கம்ப்யூட்டர் அசெம்பிளிங் செய்வது மிக மிக சுலமானதாகிவிட்டது. ப்ளக் அன்ட் ப்ளே முறையில் அனைத்து பகுதிகளையும் நாமே இணைத்து, செயல்படுத்திவிடலாம்.

இதற்கு கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் படித்திருக்க வேண்டிய அவசியமோ, கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் என்ஜினியரோ தேவையில்லை. அதில் இருக்கும் மேனுவல் கைடை பார்த்து, நாமாகவே செய்துவிட முடியும்.

computer assembling in tamil

தேவை ஒரு சில மணி நேர பொறுமை மட்டுமே…!

எப்படி கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்வது?

கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்வதற்கு முன்னதாக ஒரு கம்ப்யூட்டரில் உள்ள பாகங்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதைப்பற்றி விபரம் வேண்டுபவர்கள் கம்ப்யூட்டர் பாகங்கள் பக்கத்தை முதலில் பார்க்கவும்.

பாகங்கள் வாங்குதல்:

உங்கள் தேவை மற்றும் வசதிக்கேற்ப கம்ப்யூட்டரில் அமைக்கப் போகும் பாகங்களைத் தெளிவாக முடிவு செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னர் அவற்றின் விலைகள். தற்போது போட்டி காரணமாகவும், மிக எளிதில் கிடைப்பதாலும் விலைகள் பெரும்பாலும் சரியானவையாகவே இருக்கின்றன.

எனினும் விலையை விட, விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் சுறுசுறுப்பை முக்கியமாக கவனித்து வாங்குதல் நல்லது. வாங்கும் பாகங்களுக்கு எவ்வளவு காலம் வாரண்டி என்பது போன்ற விபரங்களை தகுந்த அத்தாட்சியுடன் பெற்றுக் கொள்வது நல்லது.

பாகங்களை வாங்குமுன் நீங்கள் வைத்திருக்கும்/செய்யவிருக்கும் கம்ப்யூட்டருக்கு அது ஒத்துப் போகுமா என உறுதி செய்து கொள்ளவும். ஒரு கம்ப்யூட்டருக்கு வேண்டிய எல்லாப் பாகங்களும் ஒன்று சேர்த்த பின்னரே அசெம்பிள்  செய்யத் தொடங்குவது, அதில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைக் விரைவாகக் களைய உதவும். முக்கியமாக கம்ப்யூட்டருக்கு கிடைக்கும் மின்சக்தி சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள ஸ்டெபிலைஸர் அல்லது UPS அவசியம் தேவை.

தயாராகுதல்:

கம்ப்யூட்டரில் அசெம்பிள் செய்யப் போவது CPU எனும் பெட்டியை மட்டும் தான். மற்ற பாகங்களான மானிட்டர், கீஃபோர்ட், மௌஸ் முதலியவற்றை வாங்கி அப்படியே இணைக்க வேண்டியது தான்.

அசெம்பிள் செய்யும் போது சர்க்யூட் போர்டுகளைக் கையாள வேண்டியிருப்பதால் நம் கையில் (தலைமுடியைக் கோதுதல், உல்லன் பேன்ட் முதலியவற்றில் கையைத் துடைத்தல் முதலியவற்றால்) ஏற்படக்கூடிய ஸ்டேடிக் மின்சாரத்தை முதலில் எர்த் செய்ய வேண்டும்.

ஜன்னல் அல்லது இரும்பு மேஜைக்கால்களைத் தொட்டு எர்த் செய்யலாம். கையில் ஸ்டேடிக் மின்சாரத்தை எர்த் செய்யவென்றே உபயோகிக்கப்படும் கைப்பட்டையை முடிந்தால் அவசியம் பயன்படுத்தவும்.

அசெம்பிள் செய்ய உபயோகிக்கப்படும் மேஜை மரத்தாலனவையாக இருத்தல் நலம். மேஜை மீது பாலியஸ்டர் போன்ற துணிகளையோ அல்லது ப்ளாஸ்டிக் திரைச்சீலைகளையோ கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. சர்க்யூட் போர்டுகளில் இணைக்கும் பகுதிகளில் உள்ள செம்புப் பட்டைகளை எக்காரணம் கொண்டும் கையால் தொடக்கூடாது.

அசெம்பிளிங்:

CPUவில் எல்லா கருவிகளுக்கும் இணைப்புப் பாலமான ‘மதர் போர்டை’, கேபினட்டில் உள்ள பேஸ் ப்ளேட்டை எடுத்து அதிலுள்ள துளைகளுக்கு நேராக அத்துடன் கொடுக்கப்பட்ட ப்ளாஸ்டிக் ஆணிகளை உபயோகித்து நிலைபெறச் செய்ய வேண்டும்.

இதன் பின்னரே ப்ராஸஸர், மெமரி (RAM) உட்பட தேவைப்படும் பாகங்களை முறைப்படி இணைக்க வேண்டும். இந்த இணைப்பு முறைகள் தொழில்நுட்பம் மாறும் போது அவ்வப்போது மாறி வருவதால் அந்த பாகத்துடன் வரும் மானுவலைப் படித்து பார்த்து அதன்படி இணைக்கவும்.

முக்கியமாக மதர்போர்டில் செய்ய வேண்டிய செட்டிங்குகள் இருக்கின்றனவா என்று மதர்போர்டு மானுவலைப் பார்க்கவும்.

பயாஸ் செட்டிங் (BIOS‍ Settings):

அசெம்பிளிங் முடித்து, மானிட்டர், கீஃபோர்ட், மௌஸ் போன்றவற்றை CPU உடன் இணைத்து கம்ப்யூட்டர் தயாரானபின், தகுந்த பவர் சப்ளை அளித்து கம்ப்யூட்டரை உயிர்ப்பிக்கவும்.

திரையில் அது செல்ப் செக்கிங் வேலைகளை முடித்து ஆபரேட்டிங் சிஸ்டத்தைக் காணோம் என்பது போன்ற தகவலைச் சொன்னால் உங்களைத் தட்டிக் கொடுத்துக் கொள்ளவும். உங்களுடைய கம்ப்யூட்டரை நீங்களே அசெம்பிள் செய்து விட்டீர்கள்.

கம்ப்யூட்டரில் உள்ள பாகங்களின் விபரங்களை பயாஸ் பெரும்பாலும் தானாகவே குறித்துக் கொள்ளும். இருந்தாலும் மதர்போர்ட் மானுவல் உதவியுடன் நிச்சயித்துக் கொள்வது நலம்.

பின்னர் ஹார்ட் டிஸ்க் பார்மாட், ஆப்பரேடிங் சிஸ்டம் லோட் செய்தல் என்று மென்பொருள் வேலை தான் பாக்கி.

அதைத் செய்து முடித்தால் ஒரு முழுமையான கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்து வேலைக்கு தயார் ஆகிவிட்டது.

இந்த வீடியோ மிக எளிதாக கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்வது பற்றி விளக்குகிறது. பார்த்து பயனடையுங்கள்.

[youtube https://www.youtube.com/watch?v=obSsX7-ZwWc]

தொடர்புடைய பதிவு: ஸ்லோவாக இருக்கும் கம்ப்யூட்டரை ஸ்பீட்அப் செய்வது எப்படி? 

By admin

One thought on “கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்வது எப்படி? [Computer Assemble Tutorial]”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *