vodafone-on-demonetization-enables

கையில் பணம் இல்லாமல் வங்கிகளில் நீண்ட நேரம் நிற்பவர்களுக்குக் கை கொடுக்க வோடபோன் சேவையைப் பயன்படுத்தலாமே. ஒரே ஆப், ஒரு ப்ரூஃப் இருந்தால் உங்களுக்கு வேண்டிய பணத்தை வங்கி அல்லது ஏடிஎம் மையங்களுக்குச் செல்லாமல் எடுக்க முடியும்.

வோடபோன் இந்தியா பயனர்களுக்குப் பணம் எடுக்க இந்தியா முழுக்க 120,000 இடங்களில் வோடபோன் எம்-பேசா (Vodafone M-Pesa) அவுட்லெட்களை அமைத்துள்ளது. இதன் மூலம் சுமார் 8.4 மில்லியனுக்கும் அதிகமான வோடபோன் எம்-பேசா ஆப் பயனர்கள் வங்கிகளுக்குச் செல்லாமல் பணம் எடுக்க முடியும்.

எம்-பேசா அவுட்லெட்

பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் தங்களின் அடையாளச் சான்று ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். பயனர்கள் தங்களுக்கு அருகாமையில் இருக்கும் வோடபோன் எம்-பேசா அவுட்லெட் சென்று ஆர்பிஐ விதிமுறைகளுக்கு ஏற்ப பணம் எடுக்க முடியும்.

டவுன்லோடு

வோடபோன் எம்-பேசா பயன்படுத்த பயனர்கள் எம்-பேசா ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்ய வேண்டும். இந்த ஆப் வோடபோன் மற்றும் வோடபோன் அல்லாத மற்ற சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியும்.

கிளிக்

எம்-பேசா ஆப் மூலம் பயனர்கள் மொபைல் ரீசார்ஜ், டிடிஎச் ரீசார்ஜ், போஸ்ட்பெயிட் பில், மின் கட்டணம், கேஸ் கட்டணம் மற்றும் லேண்ட்லைன் பில் போன்றவற்றைச் சில கிளிக் மூலம் மேற்கொள்ள முடியும்.

வேலெட்

பயனர்களுக்குப் புதிய சலுகையாகத் தங்களின் வேலெட்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் போன்றவற்றைப் பயன்படுத்திப் பணம் பரிமாறிக் கொள்ள முடியும். இந்தப் பணப் பரிமாற்றத்திற்கு எவ்வித கட்டணமும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்சமயம் வரை இந்தச் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.

வோடபோன்

வோடபோன் எம்-பேசா ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் எந்த வங்கி அல்லது ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் கிடையாது. நாடு முழுக்கச் சுமார் 120,000 எம்-பேசா அவுட்லெட்களில் வித்தியாசமான பணம் எடுக்கும் முறை கொண்டு பணம் எடுக்க முடியும். இவற்றில் சுமார் 56% கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக வோடபோன் நிறுவனத்தின் சுரேஷ் சேதி தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *