மொபைலில் போட்டோ எடுப்பது என்பது சர்வ சாதாரணமான விஷயமாகிவிட்டது. மொபைல் கேமிரா பயன்படுத்தியே ஒரு தொழில்முறை போட்டோகிராபர் போன்று போட்டோக்கள் எடுக்கலாம். இதனை மொபைல் போட்டோகிராபி என்கின்றனர்.

தரமான போட்டோக்களை மொபைல் மூலம் எடுக்க முடியும். அதற்கு மொபைல் போனில் ஒரு சில கருவிகளை இணைக்க வேண்டும். என்னென்ன கருவிகளை எப்படி இணைத்தால், தரமான போட்டோவை பெற முடியும் என்பதை இங்கு விளக்கியிருக்கிறோம்.

mobile photography equipments

பொதுவாக புகைப்படம் எடுக்கும்போது பெரும் பிரச்சனையாக இருப்பது வெளிச்சம்தான். என்னதான் மொபைல்போனில் பிளாஷ் இருந்தாலும் நல்ல வெளிச்சம் இருந்தால்தான் புகைப்படம் தெளிவாக இருக்கும். இதற்கு உதவும் உபகரணம்தான் பாக்கெட் ஸ்பாட்லைட்.

இந்த லைட்டை மொபைல்போனுடன் பொருத்தி கொண்டால் நல்ல வெளிச்சத்தை தரும். அதிக வெளிச்சம், சுமாரான வெளிச்சம், மிக சுமாரான வெளிச்சம் தரும் வகையில் மூன்று விதமாக இந்த பாக்கெட் ஸ்பாட்லைட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாக்கெட் ஸ்பாட்லைட், ஹெட்போன் போல சிறிய அளவில் பாக்கெட்டில் வைத்து கொள்ளும் அளவில் இருக்கும். மேலும் இதில் தனியாக பேட்டரி பொருத்தப்பட்டு உள்ளதால் உங்கள் மொபைல் போனின் பேட்டரி இதனால் வீணாகாது.

டிரைபாட்ஸ் (Tripods)

புகைப்படங்கள் எடுக்கும்போது பலருக்கு ஏற்படும் பிரச்சனை கை நடுங்குவது. புகைப்படம் எடுக்கும்போது கை அசையாமல் இருக்க வேண்டும். இல்லையெனில் எடுக்கப்படும் புகைப்படத்தில் தெளிவு இருக்காது.

எனவே இதற்காக உங்களுக்கு உதவும் உபகரணம்தான் டிரைபாட்ஸ்.
இந்த டிரைபாட்ஸ்-இல் மொபைல் போனை பொருத்திவிட்டு புகைப்படம் எடுத்தால் தெளிவாக இருக்கும்.

குறிப்பாக சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை தொடர்ந்து பல ஷாடுக்கள் எடுக்க வேண்டும் என்றால் இந்த உபகரணம் மிகவும் உதவியாக இருக்கும்.

செல்பி ஸ்டிக்:

இன்று செல்பிதான் உலகம் என்று மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்கள் செல்பி எடுக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். சிலர் ஆபத்தான் செல்பியை எடுத்து உயிரையும் இழந்து வருவதை பார்த்துவருகிறோம்.

இந்நிலையில் செல்பியை சரியான கோணத்தில் எளிமையாக எடுக்க நமக்கு உதவும் உபகரணம்தான் செல்பி ஸ்டிக். குறிப்பாக குரூப்பாக செல்பி எடுக்கும்போது இந்த ஸ்டிக் இல்லாமல் எடுக்க முடியாது. புளூடூத் மூலம் இயங்கும் செல்பி ஸ்டிக்களும் இப்போது வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடிஷனல் லென்ஸ்:

தற்போது ஒரு முழு குறும்படத்தையே தரமான செல்பியில் எடுத்து விடுகின்றனர். அதற்கு காரணம் மொபைல் போனில் பொருத்தப்படும் அடிஷனல் லென்ஸ்தான். இந்த லென்ஸ் மூலம் சரியான கோணத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் மிக எளிதாக எடுக்க முடியும். இந்த லென்ஸ் பல வகைகளில், பல வடிவத்தில் கிடைக்கின்றது.

தொடர்புடைய இடுகை: ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான புகைப்படம் பெறுவது எப்படி? 

By admin

2 thoughts on “மொபைல் போட்டோகிராபி டிப்ஸ் ! [Mobile Photography Tips]”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *