பீம் செயலியை பயன்படுத்தி ஆன்லைனிலோ அல்லது இணையதள வசதி இல்லாமலோ வங்கி கணக்கிலிருந்து மற்ற வங்கி கணக்கிற்கோ அல்லது பிற கட்டணங்களை செலுத்துவதற்கோ பயன்படுத்திக்கொள்ளலாம்.

Bhim app  to transfer money

இந்த கட்டணங்களை செலுத்துவதற்கும், பண பரிவர்த்தனை செய்வதற்கும் வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களோ அல்லது பிற விவரங்களோ தேவையில்லை ஆனால் வாடிக்கையாளர்களின் மொபைல் எண் மட்டுமே போதுமானது ஆகும்.

ஆனால் இந்த ஸ்மார்ட் போன் செயலி இன்னும் முழுமையாக செயல்பட தொடங்கவில்லை ஆனால் அதற்குள் இந்தியா முழுவதும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது மொபைல்களில் பதிவிறக்கம் செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பீம் செயலியின் பெயரில் வாடிக்கையாளர்களுக்கு சில விஷமிகளிடமிருந்து கட்டண ரசீதிற்கான குறுஞ்செய்திகள் வந்ததாக புகார்கள் எழுந்துள்ளது.

அதானால் பீம் ஆப் நிறுவனமானது அவர்களுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் சமூக வலைதள பக்கத்தில், BHIM செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு யாருக்கும் எந்தவித கட்டணத்திற்கான குறுஞ்செய்திகளையும் அனுப்பவில்லை எனவும் அப்படி ஏதாவது குறுஞ்செய்திகள் வந்தால் அதனை நம்ப வேண்டாம் எனவும் அறிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *