use relience sim in 2g 3g

ஜியோ சேவைகளை 2ஜி / 3ஜி போன்களில் பயன்படுத்துவது எப்படி என்பதில் உங்களுக்கு குழப்பம் ஏதேனும் இருப்பின், கீழ்வரும் எளிய வழிமுறைகள் அதற்கு தீர்வாய் விளங்கும்.

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் அட்டகாசமான சேவைகளை ஒரு 4ஜி ஸ்மார்ட்போன் கொண்டு மட்டுமே அனுபவிக்க முடியும் என்பது தான் அதிக அளவிலான மக்களிடம் செல்ல ஜியோ திணறிக் கொண்டிருக்க ஒரு முக்கிய காரணியாகும்.

வரம்பற்ற ஜியோ சலுகைகளை பெற அனைவராலும் ஒரு புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்க முடியாது என்பது ஒருபக்கமிருக்க 4ஜி பயனாளர்கள் மட்டுமின்றி 2ஜி மற்றும் 3ஜி பயனர்கள் ஆகிய இருவருமே தங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போன் கொண்டு ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ஹேப்பி நியூ இயர் சலுகையை பெற முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா.?

ரிலையன்ஸ் ஜியோவின் சேவைகளை 2ஜி மற்றும் 3ஜி பயனர்கள் அனுபவிக்க ஒரு ஜியோஃபை இணைப்பு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோஃபை என்பது ஒரு ஜியோ சிம் மூலம் சேவைகளை வழங்கும் ஒரு சிறிய வைஃபை ஹாட்ஸ்பாட் கருவியாகும். இந்த கருவி தரவு இணைப்பை மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் அனைத்தையும் முழுமையாக வழங்குகிறது.

சரி, 2ஜி / 3ஜி போன்களில் ஜியோ சேவைகளை பயன்படுத்துவது எப்படி.? 1. உங்கள் ஜியோஃபை கருவியுடன் கிடைக்கப்பெறும் ஜியோ சிம் கார்ட்டை ஆக்டிவேட் செய்யவும், இது நிகழ சிறிது காலம் எடுத்துக்கொள்ளும் 2. ப்ளே ஸ்டோரில் இருந்து ஜியோ4ஜிவாய்ஸ் ஆப்தனை உங்கள் 2ஜி / 3ஜி கருவிகளில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும். 3. பின்னர், ஜியோஃபை நெட்வர்க் உடன் உங்கள் இணைக்கப்பட வேண்டும்.

4. ஜியோ4ஜி என்பதை உங்களின் டீபால்ட் காலிங் ஆப்ஷனாக வைக்கவும், இது ஆர்.ஜியோவின் அன்லிமிடெட் மற்றும் அதிவேக இணையம் ஆகியவைகளை உங்கள் 2ஜி / 3ஜி கருவிகளில் அணுக உதவும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *