instagram account creation tamil

நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்களை பயன்படுத்துகிறீர்கள் மற்றும் இதுவரை வெவ்வேறு போன்களில் தான் அவைகளை அணுகுகிறீர்கள் அல்லது ஒருவேளை ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை பயன்படுத்த ஒரு மூன்றாம் தரப்பு இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை பயன்படுத்தி வருகின்றனர் என்றால் இந்த தொகுப்பு உங்களுக்கானது தான்.

அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களை உத்தியோகபூர்வ பயன்பாட்டின் வழியாகவே மிகவும் நன்றாக பயன்படுத்த முடியும். அதை நிகழ்த்த இதோ தமிழ் கிஸ்பாட் வழங்கும் எளிய வழிமுறைகள்.

ஐபோன் கருவியென்றால்..

1. கீழ் வலது மூலையில் உள்ள பீப்பிள் ஐகானை தட்டவும்.
2. மேல் வலது புறத்தில் உள்ள கியர் ஐகானைக் தட்டவும்.
3. ஸ்க்ரால் டவுன் செய்துஆட் அக்கவுண்ட் தட்டவும்.
4. உங்கள் இரண்டாவது கணக்கை கொண்டு உள்நுழையவும்.
ஆண்ட்ராய்டு கருவியென்றால்..
1. கீழ் வலது மூலையில் உள்ள பீப்பிள் ஐகானை தட்டவும்.
2. மேல் வலது புறத்தில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளைத் தட்டவும்
3. ஸ்க்ரால் டவுன் செய்து ஆட் அக்கவுண்ட் தட்டவும்.
4. உங்கள் இரண்டாவது கணக்கை கொண்டு உள்நுழையவும்.

வெவ்வேறு அக்கவுண்ட்களுக்கு மாறுவது எப்படி.? (ஐபோன்)

1. கீழ் வலது மூலையில் உள்ள பீப்பிள் ஐகானை தட்டவும்.
2. யூசர் நேம் டைப் செய்யவும்.
3. நீங்கள் மாற விரும்பும் அக்கவுண்ட்டை தட்டவும்.
வெவ்வேறு அக்கவுண்ட்களுக்கு மாறுவது எப்படி.? (ஆண்ட்ராய்டு)
1. கீழ் வலது மூலையில் உள்ள பீப்பிள் ஐகானை தட்டவும்.
2. மேல் இடது புறத்தில் யூசர் நேம் டைப் செய்யவும்.
3. நீங்கள் மாற விரும்பும் அக்கவுண்ட்டை தட்டவும்.

இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களில் இருந்து சைன்அவுட் செய்வது எப்படி.? (ஐபோன்)

1. கீழ் வலது மூலையில் உள்ள பீப்பிள் ஐகானை தட்டவும்.
2. மேல் வலது புறத்தில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளைத் தட்டவும்
3. ஸ்க்ரால் டவுன் செய்ய இரண்டு லாக்அவுட் பட்டனை காண்பீர்கள்
4. முதல் லாக் அவுட் தட்டவும் – லாக்அவுட் ஆப் யூசர் நேம் டாப் செய்து, பாப்அப் மெனுவில் லாக் அவுட் டாப் செய்யவும்.
5. நீங்கள் அனைத்து கணக்கிலிருந்தும் லாக்அவுட் செய்ய விரும்பினால், லாக் அவுட் ஆப் ஆல் அக்கவுண்ட்ஸ் டாப் செய்து பாப்-அப் மெனுவில் லாக்அவுட் தட்டவும்.

இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களில் இருந்து சைன்அவுட் செய்வது எப்படி.? (ஆண்ட்ராய்டு)

1. கீழ் வலது மூலையில் உள்ள பீப்பிள் ஐகானை தட்டவும்.
2. மேல் வலது புறத்தில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளைத் தட்டவும்
3. ஸ்க்ரால் டவுன் செய்ய இரண்டு லாக்அவுட் பட்டனை காண்பீர்கள்
4. முதல் லாக் அவுட் தட்டவும் – லாக்அவுட் ஆப் யூசர் நேம் டாப் செய்து, பாப்அப் மெனுவில் லாக் அவுட் டாப் செய்யவும்.
5. நீங்கள் அனைத்து கணக்கிலிருந்தும் லாக்அவுட் செய்ய விரும்பினால், லாக் அவுட் ஆப் ஆல் அக்கவுண்ட்ஸ் டாப் செய்து பாப்-அப் மெனுவில் லாக்அவுட் தட்டவும்.

By admin

One thought on “2 இன்ஸ்டாகிராம் கணக்கு பயன்படுத்துவது எப்படி? [More than 2 Accounts]”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *