விண்டோஸ் 10 இயங்குதளத்தினை முன்பதிவு செய்து அனைவரும் இலவச அப்கிரேடுகளை பெற முடியும். ஆனால் இங்கு தான் அந்நிறுவனம் புதிய முறையை பின்பற்ற இருக்கின்றது.

windows 10 ilavasamaga install

புதிய இயங்குதளத்தை பயன்படுத்த ஒரிஜினல் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 பெற்றிருக்க வேண்டும். பின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மீடியா க்ரியேஷன் டூலினை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

இதோடு சிறப்பான இன்டர்நெட் வசதியும் இருக்க வேண்டும்.
புதிய இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்யும் முன் உங்களது தகவல்களை பேக்கப் செய்து கொண்டு கீழ் இருக்கும் ஃபைல்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

  1. Media Creation Tool 32-bit Windows
  2. Media Creation Tool 64-bit Windows

புதிய விண்டோஸ் 10 இயங்குதளத்தினை பதிவிறக்கம் செய்வது எப்படி ?

  • உங்களது கணினியில் மீடியா க்ரியேஷன் டூலினை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். 
  • மீடியா க்ரியேஷன் டூலில் நெக்ஸ்ட் பட்டனை க்ளிக் செய்து விண்டோஸ் 10 பதிவிறக்கத்தை துவங்க வேண்டும்.
  • இன்டர்நெட் வேகம் குறைவாக இருந்தால் பதிவிறக்கம் ஆக அதிக நேரம் ஆகும். இங்கு உங்களது டவுன்லோடு வெரிஃபை செய்யப்படும். இங்கு விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு தேவையான அனைத்து ஃபைல்களையும் சேகரிக்கப்படும். 
  • விண்டோஸ் 10 இன்ஸ்டாலர் லோடு ஆகும். விண்டோஸ் 10 இன்ஸ்டாலர் சில சோதனைகளை மேற்கொள்ளும். விண்டோஸ் 10 இன்ஸ்டாலேஷன் துவங்க லைசென்ஸ் விதிமுறைகளை ஒப்புக்கொள்ளும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். 

இன்ஸ்டால் செய்யப்படும் முன் இறுதியாக அனைத்து அப்டேட்களையும் இன்ஸ்டாலர் டூல் செக் செய்யும். இங்கு அனைத்து வழி முறைகளும் முடிந்து விடும்.

பின் இன்ஸ்டால் பட்டனை க்ளிக் செய்து விண்டோஸ் 10 இயங்குதளத்தை உங்களது கணினியில் இன்ஸ்டால் செய்யலாம்.

இங்கு உங்களுக்கு தேவையான ஆப்ஷனை க்ளிக் செய்து புதிய விண்டோஸ் 10 இயங்குதளத்தை பயன்படுத்த துவங்கலாம்.

Tags: Windwos 10 Tips and Tricks, Install Windows 10, Windows 10 Installation Guide, How to Install Windows 10. Tamil Tech Windows 10 tips.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *