உலகில் வாழும் பெரும்பாலானோர்களுக்கு தற்போது ஃபேஸ்புக் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. நண்பர்களுடன் அரட்டை அடித்து சேட் செய்வது உள்பட பல வழிகளில் ஃபேஸ்புக் நமது அன்றாட வாழ்க்கையில் நுழைந்துவிட்டது.

ஃபேஸ்புக்கில் பிளாக் செய்த நண்பர்களை அறிவது எப்படி?

how to know blocked friend list

ஆனால் அதே நேரத்தில் ஃபேஸ்புக் நட்பு எல்லை மீறும்போது ஒருசில அசம்பாவிதங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. அவ்வாறான சமயத்தில் நாம், எல்லை மீறுபவர்களை பிளாக் செய்யும் வசதி ஃபேஸ்புக்கில் உள்ளது. அதேபோல் நமது நண்பர்களும் இதே காரணத்திற்காக நம்மை பிளாக் செய்யவும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் நம்மை பிளாக் செய்த நண்பரை எப்படி கண்டுகொள்வது? இதற்கு ஒருசில வழிகள் உள்ளது. அந்த வழிகளை தற்போது பார்ப்போம்’
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஃபேஸ்புக் மெசெஞ்சரை செக் செய்யுங்கள்

உங்களுடைய நண்பர்களில் ஒருவர் உங்களை பிளாக் செய்துவிட்டதாக நீங்கள் சந்தேகம் அடைந்தால் ஃபேஸ்புக் மெசஞ்சரில் அந்த நண்பருக்கு ஏதாவது ஒரு விஷயம் குறித்து அனுப்ப மெசேஜ் டைப் செய்யுங்கள். அந்த மெசேஜ் நீங்கள் சந்தேகப்பட்ட நபருக்கு போய் சேராமல், ‘இந்த நபர் தற்போது இந்த மெசேஜை ஏற்றுகொள்ளவில்லை’ என்று பதில் வந்தால் அவர் உங்களை பிளாக் செய்துள்ளார் என்பதை புரிந்து கொள்ளலாம்

புரபொல் இமேஜை செக் செய்யுங்கள்

மெசெஞ்சரில் சேட் ஹிஸ்ட்ரியில் சென்று இதற்கு முன்னர் அந்த நண்பருடன் சேட் செய்ததை எடுத்து பாருங்கள். அதில் அவருடைய புரபொல் இமேஜ் இல்லாமல் இருந்தால் அவர் உங்களை பிளாக் செய்துவிட்டார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஹைப்பர் லிங்க் இருக்கின்றதா என்பதை பாருங்கள்

இதேபோல் சேட் ஹிஸ்ட்ரியில் சென்று அந்த நண்பருடைய பெயரில் உள்ள ஹைப்பர் லிங்க் இல்லாமல் இருந்தாலும் அவர் உங்களை பிளாக் செய்துவிட்டார் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி அந்த நண்பருடைய பெயர் போல்ட் லட்டரிலும் இருக்காது.

நண்பரின் பெயரை ஃபேஸ்புக் சியர்ச் இஞ்சினில் டைப் செய்யுங்கள்

மீண்டும் ஒருமுறை அந்த நண்பர் உங்களை பிளாக் செய்துவிட்டதை உறுதி செய்ய வேண்டும் என்றால் ஃபேஸ்புக் சியர்ச் இஞ்சினில் அவருடைய பெயரை டைப் செய்து பாருங்கள். உங்களை அவர் பிளாக் செய்திருந்தால் கண்டிப்பாக அவருடைய பெயர் சியர்ச் இஞ்சினில் வராது

நண்பர்கள் லிஸ்ட்டையும் செக் செய்யலாம்

இன்னும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்களது வேறு நண்பர்களின் ஃபேஸ்புக் அக்கவுண்டில் இருந்து அந்த நபரின் புரொபைலுக்கு சென்று நண்பர்கள் லிஸ்ட்டை பாருங்கள். அதில் உங்கள் பெயர் இல்லை என்றால் நீங்கள் அவரால் 100% பிளாக் செய்துவிட்டதை உறுதி செய்து கொள்ளலாம்.

கடைசியாக மேலும் ஒரு வாய்ப்பு

கடைசி முயற்சியாக பிளாக் ஆப்சனுக்கு சென்று உங்களை பிளாக் செய்தவர்களின் லிஸ்ட்டை செக் செய்யுங்கள். அதில் உங்கள் பெயர் இருந்தால் அவ்வளவுதான் என்று அர்த்தம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *