facebook video group chat

பேஸ்புக் சமீபத்தில் அதன் மெஸேன்ஜர் பயன்பாட்டின் வடிவமைப்பில் சீரமைக்கப்புகள் ஏற்படுத்தியபோது கேமிரா, 3டி முகமூடிகள் மற்றும் உரை அடிப்படையிலான கலைப்படைப்புகள் ஆகிய பல அம்சங்களை சேர்த்தது.

இப்போது, பேஸ்புக் நிறுவனம் அதன் மெஸேன்ஜர் பயன்பாட்டில் குழு வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள உதவும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

பேஸ்புக் மெஸேன்ஜர் க்ரூப் வீடியோ சாட் அறிமுகம் (ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்).!

சில காலமாக மெஸெஞ்சரில் இந்த வீடியோ கால் அம்சம் தேவை என்று கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இந்த வசதி இறுதியாக அது உலகம் முழுவதும் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களுடன் சேர்த்து வெப் பிரிவிலும் இடம் பெறுகிறது.

இந்த பேஸ்புக் மெஸேன்ஜர் அம்சம் கொண்டு ஒரே நேரத்தில் ஆறு பேர் வரை வீடியோ சாட்டில் ஈடுப்பட முடியும். அதே சமயம் 50 மெம்பர் வரை குரல் அல்லது கேமிரா வழியாக உரையாடல் நிகழ்த்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த க்ரூப் வீடியோ சாட்டை தொடங்கும் பொருட்டு, பயனர்கள் ஏற்கனவே தாங்கள் உள்ள க்ரூப் சாட்டிற்கு சென்று ஒரு புதிய க்ரூப் ஒன்றை உருவாக்கி திரையின் மேல் வலது பக்கத்தில் உள்ள வீடியோ ஐகானை டாப் செய்ய வேண்டும்.

அவ்வளவுதான் க்ரூப் வீடியோ கால் நிகழ்த்த முடியும். மற்றும் இந்த வசதியின் கூடுதல் அம்சமாக நீங்கள் நேரடியாக ஒரு சில மெம்பர்களுக்கு அல்லது முழு குழுவிற்கும் ரிங் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *