facebook notification malware

சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் நண்பர்களின் பெயரில் வரும் நோட்டிபிகேசன்கள் அதி பயங்க வைரஸ்சை தாங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அப்படி சந்தேகத்திற்குரிய நோட்டி பிகேஷன்களை ஜாக்கிரதையாக கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள மக்களால், அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் முக்கியமானது பேஸ்புக். இதன் மூலம் பல்வேறு தகவல்கள், செய்திகள், தனித் தகவல்கள், படங்கள், வீடியோக்கள் என பல விதமான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

பேஸ்புக்கில் நிறைய நன்மை இருந்தாலும், சில பாதகங்களும் இருப்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஹேக்கர்கள் எளிதாக  இதில் ஊடுருவுகிறார்கள்.

அதாவது பேஸ்புக் மூலம் பகிரப்படும் செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வழியாக வைரஸ்கள் அதிக அளவில் பரப்பப்படுகிறது. நண்பர்கள் பெயரில் வரும் நோட்டிபிகேஷன்களால் நமது லேப்டாப், மொபைல் மற்றும் கம்ப்யூட்டருக்கு வைரஸ் பரவுகிறது.

அதுவும், புகைப்படங்கள் மூலம் வரும் அறிவிப்புகளால் மால்வேர் டவுன்லோடு ஆகிறது. அதை நாம் கிளிக் செய்தால் வைரஸ் ஆக்டிவேட் ஆகும். குரோம் மட்டுமில்லாமல் எட்ஜ், பயர்ஃபாக்ஸ், சபாரி, ஒப்பேரா மூலமாகவும் இந்த வைரஸ்கள் பரவுகிறது.

எனவே உங்கள் பக்கத்திற்கு வரும் நோட்டிபிகேஷன்களை கவனமாக கையாள வேண்டும். கிளிக் செய்யாமல் விட்டு விடுவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

By admin

One thought on “பேஸ்புக் நோட்டிபிகேஷன் வழியாக பரவும் வைரஸ்கள் !”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *