mobile network

நுகர்வோர் சேவையை பொறுத்தவரை, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற மக்கள், தொலைத்தொடர்பு சேவைகளுக்குத் தான் அதிகம் செலவழிப்பதாக, தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கிராமப்புறங்களில்…

கிராமப்புறங்களில், 47,535 வீடுகள் மற்றும் நகர்ப்புறங்களில், 36,065 வீடுகளின் செலவினங்கள் குறித்து, போக்குவரத்து, பலதரப்பட்ட நுகர்வோர் சேவைகள், பிற சேவைகள், வீட்டு பயன்பாட்டு பொருட்கள் ஆகிய, நான்கு பிரிவு களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், நுகர்வோர் சேவைகளுக்கான செலவில், கிராமப்புறத்தினர் மிக அதிகமாக, தொலைத்தொடர்பு சேவைக்கு, 25.33 சதவீதம் செலவிடுவது தெரியவந்துள்ளது. இது, நகர்ப்புறத்தில், 26.33 சதவீதமாக உள்ளது. அதுபோல, கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில், தனிநபரின் மாதாந்திர சராசரி செலவிலும், தொலைபேசி, மொபைல் போன் சேவைகள் தான் முதலிடத்தை பிடித்துள்ளன.

இவ்வகை சேவைகளுக்கு, தனிநபரின் மாதாந்திர செலவு, கிராமப்புறங்களில், 36.35 ரூபாயாகவும்,நகர்ப்புறங்களில், 102.46 ரூபாயாகவும் உள்ளது.

அப்டேட்: 

தற்பொழுது ரிலையன்ஸ் ஜியோ 4 ஜி சேவை அறிமுகப்படுத்தியவுடன், மற்ற மொபைல் நெட் வொர்க்குகள் கட்டணங்களை போட்டிப் போட்டுக்கொண்டு குறைத்தும், வாடிக்கையாளர்களை நிலைநிறுத்துவதில் அவர்கள் செய்யும் தில்லா லங்கடிகளையும் பார்க்கும்போது உண்மை புலனாகும்.

இத்தனை நாட்கள் மக்களை மொபைல் சேவை கம்பெனிகள் கொள்ளை அடித்தது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆதாரம்; தினமலர்.

By admin

One thought on “நம்மை மொட்டை அடிக்கும் மொபைல் நெட்வொர்க் கம்பெனிகள் !”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *