google search

கூகிளில் இந்தியர்கள் அதிகம் தேடும் விஷயம் எது தெரியுமா? சினிமதான். அதற்கடுத்து கிரிக்கெட்.

இணைய தேடுபொறியான, ‘கூகுள்‘ பயன்படுத்தும் இந்தியர்கள், சினிமா மற்றும் நடிகர், நடிகையரை பற்றிய விஷயங்களை தான், அதிகம் தேடுவதாக தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து இயங்கும், கூகுள் நிறுவனத்தின் இந்திய தலைமை விற்பனை அதிகாரியான சப்னா சத்தா கூறியதாவது:

கூகுளில் தகவல் தேடும் இந்தியர்களில், 10ல் ஒருவர், சினிமா, நடிகர், நடிகையர் தொடர்பான தகவல்களையே தேடுகிறார்.

இந்தியர்களின் இந்த ஆர்வத்துக்கு தீனிப்போடும் வகையில், உள்ளூர் திரைப்படங்கள், நடிகர்கள் உள்ளிட்டவிவரங்கள், கூகுளில் உடனடியாக சேர்க்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம், தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகை, இயக்குனர், சினிமா குறித்த உடனடி தகவல் களை பெற முடிகிறது. சினிமாவை தொடர்ந்து, கிரிக்கெட் குறித்து அதிகளவில் தேடப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முந்தினார் சன்னி லியோன்: கடந்த 2015ல்,இந்தியாவில் அதிகமானோரால் கூகுளில் தேடப்பட்ட நபர்களில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, முதலிடத்தை பிடித்தார் நடிகை சன்னி லியோன். அதற்கடுத்த இடங்களில் சல்மான் கான், அப்துல் கலாம், கத்ரீனா கைப்,தீபிகா படுகோனே

ஆகியோர் உள்ளனர். 2014ல், இரண்டாம் இடத்தில் இருந்த பிரதமர் மோடி , 2015ல், 10வது இடத்தை பிடித்தார்.

இந்திய திரைப்படங்களில், அதிகமானோர் தேடியது, பாகுபலி படத்தை தான். கடந்த ஆண்டில், அதிகமானோர் தேடிய விஷயங் களில், முதலிடத்தில் பிளிப்கார்ட் உள்ளது.

நன்றி: தினமலர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *