Whatsapp to drop support for blackberry Nokia

பேஸ்புக் நிறுவனத்தின் மெசென்ஜர் சேவை பிளாக்பெர்ரி, நோக்கியா மொபைல்களுக்கு நிறுத்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்ஆப் மெஸ்ஸெஞ்சர் சேவை, பிளாக்பெர்ரி மொபைல் உட்பட பல மொபைல்களில் இந்த வருட இறுதியுடன் காலவதியாக உள்ளது. Nokia சிம்பியன் S40, சிம்பியன் S60  பதிப்புகளில் மற்றும் Android 2.1, 2.2, Windows Phone 7.1 OS கொண்ட மொபைல்களில் இந்த சேவையை நிறுத்த உள்ளது.

whatsapp service shutdown

இது குறித்த அறிவிப்பு வாட்ஸ்ஆப் ப்ளாகில் வெளியாகி உள்ளது. 2009 இல் வாட்ஸ்ஆப் அறிமுகம் ஆகும் போது சந்தை நிலவரம் வேறு மாதிரியாக இருந்தது. அப்பொழுது, ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். போன்றவை சந்தையில் 25 சதவீதம் மட்டுமே இருந்தது. ஆனால் நோக்கியா, பிளாக்பெர்ரி 70 சதவீதம் இருந்தது. ஆனால் தற்போது இந்த நிலமை தலைகீழாக மாறியுள்ளது.

வாட்ஸ்ஆப் செயலியை பதிவிறக்கம் செய்வதிலும் இந்த மொபைல்களில் பல பிரச்சனைகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த கடினமான முடிவை எடுத்திருப்பதாக வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

வரும் டிசம்பர் மாதத்திற்குள் குறிப்பிடப்பட்ட அந்த கருவிகளில் வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தப்பட உள்ளது.

By admin

2 thoughts on “வாட்சப் சேவை நிறுத்த தகவலால் அதிர்ச்சி அடைந்த மொபைல் பயனர்கள் !”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *