kids websites for cartoon videos

குழந்தைகளுக்கு எல்லாம் லீவு விட்டிருப்பாங்க.. இந்த கடுமையான வெயில் காலத்துல எங்கேயும் ஸ்பெஷல் கிளாஸ் அனுப்ப முடியாது. அந்தளவுக்கு வெயில் கொடுமை. ஆனால் பிள்ளைகளை வீட்ல வச்சுகிட்டு கண்ட்ரோல் பன்றதும் சிரமமமாக இருக்கும்.

வருஷம் பூரா பள்ளி கூடத்துக்கு போய்ட்டு வந்த பிள்ளைங்க, இந்த 2 மாசத்துல சுதந்திரமா சுத்தி திரிவாங்க. அவங்களை கட்டுப்படுத்தறது ரொம்ப சிரமம்.

ஆனால் 2 மாசத்தையும் ஏதாவது பயனுள்ள வகையில் அவங்களுக்கு மாத்தி கொடுக்கிறது பெற்றோரோட கடமை இல்லையா? அதுக்கு என்ன செய்யலாம்…?

அவங்களுக்கு உபயோகமான புத்தகங்கள் வாங்கி படிக்க கொடுக்கலாம். அவங்களாகவே கத்துக்கிற மாதிரி ஒரு சில டெக்னிக்குகள் இருக்கிற பொம்மைகள் வாங்கி தரலாம். இதைவிட்டா, எங்காவது குளு குளு ஊட்டி மாதிரியான இடங்களுக்கு அழைத்து செல்லலாம்..

மாமா வீடு, அத்தைவீடு ன்னு இல்லாம வெயில் குறைவாக இருக்கிற கிராமத்து பக்கம் இருக்கிற சொந்தக் காரங்க வீட்டுக்கு – தோட்டத்துக்கு போய்ட்டு வரலாம்..

இப்படி ஏதாவது வித்தியாசமா செய்யலாம்..

வேற எங்கேயும் போக முடியாது. வீட்டோடதான்…னு இருக்கிற பசங்களுக்கு இணையத்துல இருக்கிற யூஸ்புல்லான வெப்சைட்களை அறிமுகபடுத்தலாம்.

குழந்தைகள்னாலே அவங்களுக்கு கார்ட்டூன் படங்கள் அதிகம் பிடிக்கும். இப்போ இருக்கிற குழந்தைகள் “சோட்டா பீம்” பார்க்கிறது அதிகமாகிட்டே போகுது.

சுட்டி டி.வி மாதிரியான குழந்தைகளுக்கான டி.வி. சேனல்களே கதியாக கிடப்பாங்க….

அதுக்கு மாற்றா இன்டர்நெட்ல நிறைய கார்ட்டூன் சேனல்ஸ், வெப்சைட்ஸ் இருக்கு. அதை அறிமுகப்படுத்தலாம்.

எனக்குத் தெரிஞ்சி ஒரு அற்புதமான கார்ட்டூன் வெப்சைட் இருக்கு. Kideos.com. இது “கிட்ஸ்”க்காகவே உருவாக்கப்பட்ட இணையத்தளம். இதுல ஏகப்பட்ட வித்தியாசமான கார்ட்டூன் படங்கள், கிராபிக்ஸ் படங்கள் இருக்கு. கண்டிப்பா உங்க குழந்தைக்கும் பிடிக்கும்.

வலைத்தள முகவரி: http://www.kideos.com/

இந்த வெப்சைட்டோட ஸ்பெஷலே இதுல Parental Control செட்டிங்ஸ் இருக்கிறதுதான். இந்த வெப்சைட்டை எவ்வளவு நேரம் பார்க்கலாம்னு நாம கன்ட்ரோல் பண்ண முடியும். அது மட்டுமில்லாம எத்தனை வயசுக்குரியவர் பார்க்கணும்னு செட்டிங்ஸ் அமைச்சுக்க முடியும்.

அப்புறம் இந்த வெப்சைட்ல நிறைய வெப்சைட் லிஸ்ட் கொடுத்திருக்காங்க. எல்லாமே குழந்தைகளுக்கானதுதான். (கீழ லிங்க் இருக்கு பாருங்க)

Useful Websites Lists for Kids

கீழ இருக்கற லிங்க்ல கூட  Top 25 வெப்சைட்டை லிஸ்ட் பண்ணி கொடுத்திருக்காங்க. எல்லாமே குழந்தைகளுக்கானதுதான்.

Top 25 Website Links for Kids

அதே மாதிரி இந்த வெப்சைட்ல கூட 10 பெஸ்ட் லிஸ்ட் கொடுத்திருக்காங்க.

Top 10 Best Educational Websites for Kids

இது மாதிரி உங்களுக்குத் தெரிஞ்ச வெப்சைட்களும் இருந்தால் இங்கே “கமெண்ட்”ல பகிர்ந்துக்கோங்க…இந்த பதிவை படிக்கிறவங்களும் தெரிஞ்சுக்க முடியும்தானே..!

Tags: Website for Kids, Kids Video Website, Cartoon Website for Kids, Tamil Kids Websites.

By admin

One thought on “குழந்தைகளுக்குப் பயன்படும் குதூகல வெப்சைட்கள் !”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *