நீங்கள் இன்டர்நெட்டில் பிரௌஸ் செய்யும்பொழுது, பெரும்பாலான வெப் பேஜ் டேட்டாக்கள் கம்ப்யூட்டரில் தற்காலிகமாக சேமிக்கப்படும். இது அடுத்த முறை நீங்கள் அதே வெப் பேஜ் விசிட் செய்யும்பொழுது வேகமாக திறக்க உதவுகிறது.

இப்படி பலதரப்பட்ட வெப்சைட்டுகளை பார்வையிடும்பொழுது, அந்த கேட்சி பைல்கள் நிறைய சேர்ந்துவிடும். இதனால் உங்களுடைய டிஸ்க் ஸ்பேஸ் குறைந்துவிடும். அதை சரி செய்யவும், நீங்கள் பிரௌஸ் செய்வதை யாரும் தெரிந்துகொள்ளாமல் இருக்கவும் பிரௌஸ் ஹிஸ்டரியை டெலிட் செய்வது அவசியமாகிறது.

 

எப்படி பிரௌசர் ஹிஸ்டரியை டெலிட் செய்வது?

நீங்கள் பயனபடுத்தும் எந்த ஒரு பிரௌசரிலும் Browser History – ஐ கிளியர் செய்ய ஆப்சன் வழங்கப்பட்டிருக்கும்.

Google Chrome

1. குரோம் பிரோசரில் எந்த ஒரு விண்டோவிலும் Ctrl + H அழுத்தினால் ஹிஸ்டரி விண்டோ திறந்துகொள்ளும். அல்லது Chrome://History என குரோம் பிரௌசர் அட்ரஸ்பாரில் டைப் செய்து என்டர் கொடுத்தால் ஹிஸ்டரி பேஜ் திறந்துகொள்ளும்.
2. மெனு பட்டனை  கிளிக் செய்து, History ==> History என்பதை கிளிக் செய்தால் ஹிஸ்டரி பேஜ் திறந்து கொள்ளும்.
clear browsing data in google chrome

குரோம் பிரௌசரில் ஹிஸ்டரி கிளியர் செய்ய

மெனு பட்டனை கிளிக் செய்து, More Tool கிளிக் செய்து, அதில் கிளியர் பிரௌசிங் டேட்டா Clear Browsing Date என்பதை கிளிக் செய்து கிளியர் செய்யலாம். அல்லது கீபோர்டில் Ctrl+Shift+Del பட்டனை கிளிக் செய்யவும்.
clear browsing data in google chrome
தோன்றும் விண்டோவில், நீங்கள் எந்த டேட்டாவை கிளியர் செய்ய வேண்டும் என்பதினை தேர்ந்தெடுக்கலாம்.
பிறகு கிளியர் Browsing Data என்ற பட்டனை கிளிக் செய்து கிளியர் செய்துவிடலாம்.

ஆன்ட்ராய்ட் போன் அல்லது டேப்ளட்டில் கூகிள் குரோம்

1.ஆன்ட்ராய்ட் போன் / டேப்ளட் – ல் கூகுள் குரோம் ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.
2. வலது மேல் மூலையின் உள்ள மெனுவை டேப் செய்யுங்கள்
3. தோன்றும் டிராப்டவுன் மெனுவில், History என்பதை டேப் செய்யவும்.
4. இப்பொழுது அடியில் உள்ள Clear Browsing Data என்பதை டேப் செய்யவும்.
5. பாக்சில் டிக் ஏற்படுத்தி, கிளியர் பட்டனை அழுத்தவும்.

ஐபோனில் கூகிள் குரோம்

1. ஐபோனில் கூகிள் குரோம் பிரௌசரை ஓப்பன் செய்துகொள்ளவும்.
2. அட்ரஸ்பார் அல்லது சர்ச் பாக்சில் கிளிக் செய்யவும்.
3. பேஜின் கீழுள்ள View search history என்பதினை கிளிக் செய்யவும்.
4. அடுத்து CLEAR ALL கொடுக்கவும்.

5. உறுதிபடுத்திக்கொண்டு, CLEAR ON-DEVICE HISTORY. என்பதை கிளிக் செய்யவும்.

ஓபரா பிரௌசர்

ஓபரா பிரௌசரில் ஹிஸ்டரி கிளியர் செய்வது மிக சுலபம். நேரிடையாக History கிளியர் செய்வதற்கு ஆப்சன் வழங்கபட்டிருக்கும்.

ஓபரா பிரௌசரில் பிரௌசிங் ஹிஸ்டரி பார்க்க:

ஒபரா பிரௌசர் விண்டோவில், இடது மேல் மூலையில் உள்ள மெனு பாரை அழுத்தவும்.

clear history in opera

அதில் History என்பதை அழுத்தினால், ஹிஸ்டரி பேஜ் ஓப்பனாகும்.

ஓபரா பிரௌசரில் ஹிஸ்டரி கிளியர் செய்ய:

1. மேற்குறிப்பிட்டவாறு History பக்கத்தை திறந்துகொள்ளவும்.
2. கிளியர் பிரௌசிங் டேட்டா என்பதனை கிளிக் செய்யவும்.
3. டிராப்டவுன் மெனுவில் எந்த டேட்டா கிளியர் ஆக வேண்டும் என்பதை தெரிவு செய்யவும்.
4. இறுதியாக Clear Browsing Data என்பதை சொடுக்கவும்.

மொசில்லா பயர்பாக்ஸ்

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *