கணியை இயக்கும்போதே செல்போனையும் இயக்கலாம். அதற்கு உதவுகிறது சில செயலிகள். அவற்றில் நாம் தெரிந்துகொள்ள போவது Air Droid என்ற ஆன்ட்ராய்ட் செயலி.

இந்த செயலை மேற்கொள்ள கணினி, ஸ்மார்ட்போன் இரண்டும் ஒரே நெட்வொர்க் கனெக்சனை பெற்றிருக்க வேண்டும்.

pc to android access

ஏர்ட்ராய்டு – Air droid

ஏர்ட்ராய்டு என்பது கணினி மூலம் ஸ்மார்ட்போன் அணுகலை வழங்கும் பயன்பாடு.

android phone access from pc

எப்படி பயன்படுத்துவது?

  • மிக சுலபம்தான். முதலில் ஸ்மார்ட்போனில் ஆர்ட்ராய்ட் செயலியை பதவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
  • அடுத்து கணினியில் www.web.aridroid.com என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
  • முதலில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஏர்ட்ராய்ட் செயலியை பதிவிறக்க வேண்டும்.
  • பின்னர் web.airdroid.com என்ற வலைதளத்துக்குள் கணினி மூலம் போக வேண்டும். இப்போது, ஒரு விண்டோ க்யூஆர் குறியீடு பாப் அப் ஆகும்.
  • பின்னர், ஸ்மார்ட்போனில் திறந்து வைத்திருக்கும் ஏர்ட்ராய்ட் செயலியில் web.airdroid.com விலிருந்து எடுத்த குறியீடை ஸ்கேன் செய்வதற்கு, திரையின் மேல் உள்ள ஸ்கேன் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அவ்வளவுதான்.

android to pc

இதன் பின்னர் கணினி மூலம் ஸ்மார்ட்போனை இயக்க தொடங்கலாம்.

இந்த பயன்பாடு செயல்பாட்டுக்கு வந்த பின்னர், போன் செய்வது, எஸ்.எம்.எஸ் அனுப்புவது, வீடியோ பார்ப்பது மற்றும் இசையை கூட கேட்க முடியும்.

மேலும், ஸ்மார்ட்போன் கமெராவை தூரத்திலிருந்து கூட கணினி வழியாக கட்டுபடுத்த முடியும்.

அதனுடன், கணினியில் ஒரு URL பதிவு செய்தால், அந்த வலைப்பக்கம் ஸ்மார்ட்போன்களில் திறக்கும்.

Tags: Computer to android phone, android phone access from pc, airdroid, smartphone, tamil tech news.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *