கடற்கரைக்குப் போய் ஹையாக காற்று வாங்கி வருவோம். கடல் அலைகள் மேலெழுந்து வரும் அழகை ரசிப்போம். அப்படியே அலையோடி வரும் நீரில் காலை நனைத்து இதமாக்கிக்கொள்வோம்.

கோடைகாலங்களில் காற்று வாங்குவதற்கு என்றே கடற்கரைக்குச் செல்வோம். அதில் உள்ள மணலில் வீடுகட்டி விளையாடுவதும், ஈர மணலில் பெயரெழுதி சந்தோஷிப்பதும் நடப்பதுண்டு.

kadal alai

கடல் அலை எப்படி உருவாகிறது? அங்கிருக்கும் மணல்கள் எங்கிருந்து வந்திருக்கும்? யார் வந்து கொட்டியிருப்பார்கள்?

இயற்கையாகவே நடைபெறும் சில நிகழ்வுகளால்தான் கடல் அலை உருவாவதும், மணல்கள் உருவாவது நிகழ்கிறது.

சூரியன், சந்திரன் பூமி மீது செலுத்தும் வேறுபட்டி ஈர்ப்பு விசையால்தான் அலைகள் மாறி மாறி எழும்புகின்றன. திடீரென அலை எழுந்து வருவதும், தாழ்ந்து செல்வதும் இதனால்தான் ஏற்படுகிறது.

காற்றினால் அலைகள் வேகமாக கரையை நோக்கி வரும் பொழுது அதனுடன் சிறு சிறு கற்களையும் அரித்துக் கொண்டு வருவதால், அந்த கற்கள் ஒன்றோடு ஒன்று மோதி கிரைண்டரில் அரைக்கப்படும் மாவைப் போல கற்கள் அரைக்கப்பட்டு மணலாக உருமாறுகிறது.

பூமியின் தொடர் சுழற்சியாலும், காற்றின் வேகத்தாலும் அலைகள் ஏற்படும்பொழுது அதிக ஈர்ப்புவிசை தாங்க முடியாமல் கடலில் உள்ள பாறைகள் நொறுங்கி மணலாக அலையுடன் வந்து சேர்கிறது.

இப்படிதான் கடற்கரையில் மணல் சேர்கிறது.

அலைகள் எப்படி ஏற்படுகிறது என்பதை விளக்கும் வீடியோ:

[youtube https://www.youtube.com/watch?v=UDyhcxyR_90]

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *