இப்போது எல்லாரும் எளிதாக கார் வாங்கி விடுகிறார்கள். ஆனால் அவற்றை நிறுத்தி வைக்க போதுமான இடம் இல்லாமல் தெருவில் நிறுத்தி வைக்கிறார்கள். அல்லது அதை நிறுத்தி வைக்க வேறொரு இடத்தில் தனி வாடகை தருகிறார்கள்.

வீட்டில் மட்டுமல்ல, வெளியில் சென்றாலும் காரை நிறுத்த இடம் இல்லாமல் தவிக்க நேரிடுகிறது.

இந்தத் தவிப்பை நீக்குவதற்காக தென்கொரியாவைச் சேர்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு புதுவிதமான காரை வடிவமைத்திருக்கிறார்கள். 2.8 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் காரை பார்க்கிங் செய்யும்போது 1.65 மீட்டர் நீளமாகக் குறைத்துவிட முடியும்.

armadillo t car

அதுமட்டுமல்ல, காரை 360 டிகிரி கோணத்தில் எப்படி வேண்டுமானாலும் தேவைக்கேற்ப உயர்த்தியோ, தாழ்த்தியோ, பக்கவாட்டில் திருப்பியோ வைத்துக் கொள்ளலாம்.

இந்தக் காரின் பெயர் ARMADILLO-T.இந்த கார் பேட்டரியால் இயங்கக் கூடியது.

குயிக் சார்ஜ் ஆப்ஷன் மூலம் 10 நிமிடம் சார்ஜ் செய்தால், 100 கி.மீ. வரை பயணம் செய்யலாம். இந்தக் காரை ஸ்மார்ட் போன் மூலம் கட்டுப்படுத்த முடியும். ஆர்மடிலோ என்பது கிட்டத்தட்ட நம்ம ஊர் முள்ளம் பன்றி போல ஆபத்துக் காலங்களில் எதிரிகள் தாக்குதலில் இருந்து தப்பிக்க தனது உடலில் உள்ள கடினமான மேலோடு போன்ற பகுதியை சுருட்டி பந்து போலாக்கிக் கொள்ளும் திறன் கொண்ட ஓர் உயிரினம்.  அதைப் போலவே  தன் உடல் பாகத்தை சுருட்டிக் கொள்ளும் தன்மை கொண்ட கார் என்பதால் இதற்கு ஆர்மடிலோ என்று  கொரிய மாணவர்கள் பெயர் வைத்திருக்கலாம்.

வீடியோ:
[youtube https://www.youtube.com/watch?v=OdQ8i4UNOfY]
ஆதாரம்; தினமணி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *